RSS

Sunday, October 31, 2010

மரணம் ஒத்த நிகழ்வில்..


வாழ்த்த வந்த
உனைக் கண்டு
பாதியானது என் மீதியும்..

அர்ச்சதை அரிசியும்..
தாளச் சத்தமும்
வசதியானது என்
விசும்பலுக்கு துணையாய்...

கட்டப்பட்ட புதுமஞ்சள்
கயிறு வாசம்..
உன் வாசம் போக்கச் செய்ய
உழன்றுகொண்டிருந்தது என்னில்..

மாலைகளின் சுமை
மனச் சுமையோடு
போட்டியிட்டுத் தோற்கடித்துக் கொண்டிருந்தது..

அழ கண்கள் மன்றாடுகின்றன..
இயலா சூழல் இம்சையாக்குகிறது..
துடிக்கும் சுடுபாறை மீனாய்
துவண்டு அழுகிறேன் மனதோடு..

நடுக்கமான நிமிடங்கள்
நெளிந்து நழுவ இயலா
மூச்சடைக்கும் அறையில்
நான் சிக்கித் தவிக்கிறேன்
கூண்டுக் கிளியாக..

உணர்வுகள் உறைக்காத ஓர் நிலையில்
இமை மூடுகிறேன்..

இறந்த என் உடலைப் பார்ப்பது போல்
எனை உற்றுப் பார்க்கிறது என் மனம்..

மரணத்தை ஒத்த
நிகழ்வில் மூழ்கித்
தொலைந்திருந்தேன் அப்போது..!

--
பூமகள்.

2 comments:

அன்பரசன் said...

//மரணத்தை ஒத்த
நிகழ்வில் மூழ்கித்
தொலைந்திருந்தேன் அப்போது..!//

சூப்பர்

யாரோ said...

மரணத்தை ஒத்த
நிகழ்வில் மூழ்கித்
தொலைந்திருந்தேன்

எப்படி சாத்தியம் ? கற்பனை சற்று அதீதம் இல்லையோ?