Monday, January 17, 2011

பொங்கலோ பொங்கல்..!




மஞ்சக்கொம்பு காப்பு கட்டி
மண் பானை அடுப்பேற்றி
பொங்கி வரக் காத்திருக்கும்
சர்க்கரைத் தருணங்கள்
நினைவில் மட்டுமே..!!

குக்கருக்கு காப்பு கட்டி
தண்ணீர் கொஞ்சம் சேர்த்து ஊத்தி
விசில் பொங்கி வந்து கிழக்கில் விழ
சொல்லி வைக்கிறேன்
"பொங்கலோ பொங்கல்"..!!

--பூமகள்.

2 comments:

  1. ஏன் சலிச்சுக்குறீங்க... எப்படி வச்சாலும் பொங்கல் பொங்கல் தான்... பொங்கல் என்ற எண்ணம் மனதில் இருந்தாலே போதும்...

    ReplyDelete
  2. உங்க பொங்கல் யதார்த்த பொங்கல்.....

    ஆனா மிகுந்த வலி அதில் ஒளிந்திருக்கிறது......

    உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

கண்ணாடி ஆனாலும் முன்னால் வந்தால் தான் முகம் காட்டும்..
உங்கள் கருத்துகள் அது போல் எனை வந்தடைய இங்கு கருத்துகள் சொல்லுங்கள்..

வாசிப்பவரின் மனம் அறியச் செய்யுங்கள்..

அன்புடன் உங்கள்,
பூமகள்.