Wednesday, February 16, 2011

தளிர் நடை..!!

குளிர் பாறை தொடும்
பனித்துளி நீர் ஓடை..!!

கரை மணல் தீண்டும்
அலை கடல் மேடை..!!

மலைப் பள்ளம் விழும்
கதிரவன் ஒளி மாலை..!!

இவையாவும் தரும்
இன்பம் தோற்க்கடிக்கும்
மலர் பொன்னுடல்
ஆடி வரும் என்
அன்பு மகளின்
அன்ன நடை..!!

4 comments:

  1. உண்மைதான்... தளிர் நடை அப்படிதான் இருக்கும்.

    பாராட்டுக்கள்... (கவிதைக்கு உண்மையும் அழகுதான்)

    ReplyDelete
  2. கவிதை நன்று... ஏன் இன்னும் இன்ட்லியில் இணைக்கவில்லை...

    ReplyDelete
  3. குழல் இனிது யாழ இனிது பூமகள் கவியும் இனிது :)

    ReplyDelete

கண்ணாடி ஆனாலும் முன்னால் வந்தால் தான் முகம் காட்டும்..
உங்கள் கருத்துகள் அது போல் எனை வந்தடைய இங்கு கருத்துகள் சொல்லுங்கள்..

வாசிப்பவரின் மனம் அறியச் செய்யுங்கள்..

அன்புடன் உங்கள்,
பூமகள்.