மனது தன் அறைகள்
ஒவ்வொன்றையும் ரகசியபூட்டுகளால்
மூடிவைக்கும்..
திறக்க வரும் ஒவ்வொருவருக்கும்
ஏமாற்றமோ வியப்போ புதையலோ
நிச்சயம் காத்திருக்கும்..
விரைந்து வந்து பூட்டுடைப்பவர்
வெளியேற்றப்படுவதும்..
சாவியாகி துவாரம் நிரப்புபவர்
அங்கீகரிக்கப்படுவதும்..
அகதியானவர் வெறுக்கப்படுவதும்..
வெளியேறியவர் விருந்தினராவதும்..
மனக்கிடங்கில் கொட்டிக்கிடக்கும்
அம்மானுசம்..
இப்படியான உள்வெளியறிவதில்
தோற்றுத் தோற்றே
வென்று கொண்டிருக்கிறது
அறிவான அன்பு..!!
--பூமகள்.
மனமெனும் மாயச் சுரங்கத்தை யாரே முழுதாக அறிவர்? தோற்றுத் தோற்றே வென்று கொண்டிருக்கிறது அன்பு! -ஆழ்ந்து யோசித்தால் மிகமிகச் சரியான அழகான வார்த்தை இதைவிட வேறொன்றிருக்க முடியாது என்பது புரிகிறது பூமகள்! சபாஷ்!
ReplyDeleteவிரைந்து வந்து பூட்டுடைப்பவர்
ReplyDeleteவெளியேற்றப்படுவதும்..
சாவியாகி துவாரம் நிரப்புபவர்
அங்கீகரிக்கப்படுவதும்..///
ஆஹா அற்புதமான சிந்தனை
ReplyDeleteவணக்கம்!
பூமகளே! உன்றன் புகழ்த்தமிழ் நெஞ்சத்துள்
பாமகளே வாழ்வாள் படித்து
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்ஃ கம்பன் கழகம் பிரான்சு
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...
இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு என் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள் பூமகள்!
ReplyDeleteஇன்று வலைச்சரத்தில் உங்கள் அறிமுகங்கண்டு பூமகளின் பூக்களமா இல்லை போர்க்களமாவென அறிய ஆவலுடன் இங்கு வந்தேன்.
ReplyDeleteஅருமையான பல்சுவைக்கலமென வந்தமர்ந்து கொண்டேன். வணக்கம்.
அன்பு... தோற்றே வென்றுகொண்டிருக்கிறது... அற்புதமான சிந்தனை. அருமை!
வாழ்த்துக்கள்!
நன்றிகள் பால கணேஷ் ஐயா. :)
ReplyDelete--
ரசித்து விமர்சனமிட்டமைக்கு நன்றிகள் கவியாழி ஐயா.
--
நன்றிகள் கவிஞ்சர் கி.பாரதிதாசன் ஐயா அவர்களே.
--
வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதை கவனத்துக்கு உடன் கொண்டு வந்த திண்டுக்கல் தனபாலன், பால கணேஷ், இளமதி ஆகிய அனைத்து பதிவர்களுக்கும் நன்றிகள். உங்கள் வாழ்த்துகள் எனக்கு எழுதுவதற்கான பெரும் உத்வேகத்தைக் கொடுக்கின்றன.
ReplyDeleteநன்றிகள் பலப்பல.
அன்பின் பூமகள்
ReplyDeleteஅருமையான சிந்தனை - கவிதை நன்று - மனம் தன் அறைகளைப் பூட்டி வைத்தாலும் விருந்தினர்கள் அதிகம். வருபவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று கிடைக்கும். வந்த விருந்தினர்கள் அங்கீகரிக்கப் படுவதும், வெளீயேற்றப் படுவதும் இயல்பான செயல்கள். இறுதியில் வெலவது அன்பே !
நல்வாழ்த்துகள் பூமகள்
நட்புடன் சீனா
இன்று ஆசிரியர் பணி ஏற்று இருக்கும் தங்களின் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇன்று ஆசிரியர் பணி ஏற்று இருக்கும் தங்களின் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...
ReplyDeleteவேதா.இலங்காதிலகம்.
கவிதை அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉங்கள் தளமும் , எழுத்தின் களமும் , தேர்ந்தெடுக்கும் புகைப்படங்களின் நிறமும் சொல்லாமல் சொல்கின்றது உங்கள் ரசனையை . வாழ்த்துக்கள் .
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் ஆனதற்கு வாழ்த்துகள் பூமகள்!
ReplyDeleteவலைச்சரம் மூலம் உங்களை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி!
அருமையான வரிகள்...
ReplyDelete