Saturday, March 15, 2014

அடக்கம் அமரருள் உய்க்கும்..!!



நிஜத்தில்
எளிமையாய் இருப்பது
எளிதான காரியமில்லை..

அடங்கிப் போனால்
அலட்சியப் பார்வையையும்..
அமைதியாய் போனால்
ஏமாளியாகவும் நடத்தும் 
சுற்றம்...

இறுதியில்
எளிமையாய் இருப்பதும்
பெருமைக்காய் என்பர்.....!

இறுமாப்பு நிறைந்த
இதயத்துக்கு..
வறியோரின் நேச உணவு
ருசிப்பதில்லை..

ஏதுமில்லாதது போல்
இருத்தலும் ஓர்
ஜென் நிலைதானோ..??!!
--பூமகள்.

2 comments:

  1. தங்கள் கருத்துகள் இன்றைய உலக நிகழ்வுகளுக்கு 100 விழுக்காடு பொருந்தும்...

    http://www.thamizhmozhi.net

    ReplyDelete
  2. இன்றைய நிகழ்காலத்தின் வெளிப்பாடே இக்கவிதை. ரொம்ப நன்றிங்க பாமரன்.

    ReplyDelete

கண்ணாடி ஆனாலும் முன்னால் வந்தால் தான் முகம் காட்டும்..
உங்கள் கருத்துகள் அது போல் எனை வந்தடைய இங்கு கருத்துகள் சொல்லுங்கள்..

வாசிப்பவரின் மனம் அறியச் செய்யுங்கள்..

அன்புடன் உங்கள்,
பூமகள்.