நோயில் வீழ்ந்து
கடக்கும் நாட்களில்
நம் வீடு நமக்கே
புதிதாய் தெரிகின்றன..!
கலைந்து கிடக்கும் பொருட்களும்
துவைக்கப்படாத துணிகளும்
நிறைந்திருக்க..
சொல்லப்படாத மெல்லிய
காதல் இழையோடும்
அன்பானவர் அருகிருப்பின்
ஆண்டுக்கிருமுறையேனும்
வந்து செல்லலாம்
கொஞ்சூண்டு
காய்ச்சலும்
தடுமனும்..!!
--பூமகள்..!
1 comments:
அழகான கவிதை, அருமையான வார்த்தைகள். அருமை. வாருங்கள் பாலமகிபக்கங்கள்.
Post a Comment