பொதுவாக ஜவ்வரிசியை நம் ஊர் பக்கம் பாயாசத்துக்கு மட்டுமே பயன்படுத்துவோம். முதல் முறையாக காரம் செய்து எப்படி இத்தனை சுவையான சிற்றுண்டியை நம்மவர்கள் மறந்தார்கள் என்று எண்ணத் தோன்றியது. ஆகவே, அனைவரும் அறிய இப்பதிவு.
தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி - 2 கிண்ணம் (நீரில் நன்று 3 அல்லது 4 முறை கழுவி தண்ணீரை வடித்து வெகு சில துளிகள் தண்ணீருடன் சிறிது உப்பு சேர்த்து 10 மணி நேரம் ஊற வைக்கவும். இடையிடையே ஜவ்வரிசியை குளிக்கி/பிரட்டி வைக்கவும்)
உருளைக்கிழங்கு - 3 பெரியது (சிறிது உப்புடன் வேக வைத்தது).
எண்ணெய் - 3 மேஜைக் கரண்டி
பெருங்காயப்பொடி - சிறிதளவு
வெந்தயம் - சிறிதளவு
சீரகம் - சிறிதளவு
வறுத்த நிலக்கடலை - ஒரு கை
எலுமிச்சை - 1
சர்க்கரை - 1.5 மேஜை கரண்டி
பச்சைமிளகாய் - 3
இஞ்சி - ஒரு துண்டு
கருவேப்பிலை - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்குகளை சிறிய துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். வறுத்த நிலக்கடலையோடு இஞ்சி, பச்சைமிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து இரு சுற்றுகள் வெகு சில வினாடிகள் மிக்சியில் பொடித்துக் கொள்ள வேண்டும். நிலக்கடலை முழுவதும் பொடியாகாமல் பாதி உடைந்து இருக்க வேண்டும். பின், வாணலியில் எண்ணெய் விட்டு, சீரகம், வெந்தயம், பெருங்காயத் தூள் ஆகியவற்றைப் போட்டு தாளித்து பின் கருவேப்பிலையைப் போட்டு வதக்கிய பின் அரைத்து வைத்த கலவையைப் போட வேண்டும். பின் உருளைக் கிழங்கு துண்டுகளை அதில் சேர்த்து நன்கு பிரட்டி வதக்க வேண்டும். இதில் சர்க்கரையைச் சேர்த்துக் கிளர வேண்டும். பின், அடுப்பை நன்கு குறைத்து சிம்மில் வைத்து ஜவ்வரிசியைச் சேர்த்துத் தேவையான அளவு உப்பு சேர்த்து மெல்ல கிளற வேண்டும். அதில் எலுமிச்சையைப் பிழிந்துவிட வேண்டும். அதிக நேரம் கிளறினால் ஜவ்வரிசி பசை போல் ஆகி வாணலியில் ஒட்டிக் கொள்ளும். ஆகவே, குறைவான சூட்டில் சில நிமிடங்கள் கிளறி கொத்தமல்லி இலையை கடைசியில் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
எல்லாப் பொருட்களும் முன்பே சமைத்தவை.. ஆகவே, மிதமான சூட்டில் ஜவ்வரிசி வதங்கினாலே வெந்துவிடும். அதிக நேரம் ஜவ்வரிசியை ஊற வைத்திருப்பதால், அடுப்பில் அதிக நேரம் கிளற வேண்டிய அவசியம் இல்லை..
சமைத்துப் பாருங்கள்.. கட்டாயம் அடிக்கடி செய்வீர்கள். இதனை வட நாட்டு இந்தியர்கள் விரதம் இருக்கும் காலங்களில் விரதம் முடிந்த பின் உண்பார்களாம். செஞ்சு தான் பாருங்களேன்.
குறிப்பு: நான் இரு முறை செய்து சுவையாக உண்ட பின்னே தான் சொல்கிறேன்.. தைரியமாக செய்யுங்க.. ;-)
2 comments:
ஜவ்வரிசி செய்முறை பற்றி அண்மையில் எனக்கு வந்த மின் அஞ்சல் ஜவ்வரிசி பற்றி அருவெறுப்பைத் தந்தது, அதனைக் கீழே கொடுக்கிறேன்.
SABOODANA MADE FROM MILLIONS OF LIVING CREATURES!
heard of it earlier too..............one jain sadhviji visited one of the sabudana factories and wrote an artcle on it....now newspaper in tamilnadu notices it...must to share with all.
In Tamil Nadu, in Salem area on the road from Salem to Coimbatore there are many saboodana factories. We start getting terribly bad smell when we are about 2 kms away from the factories.
Saboodana is made by root like sweet potato. Kerala has this root each weighing about 6kgs. Factory owners buy these roots in bulk during season, make it to pulp and put it in pits of about 40ft x 25ft. Pits are in open ground and the pulp is allowed to rot for several months. Thousands of tons of roots rot in pits. There are huge electric bulbs throughout the night where millions of insects fall in the pits.
While pulp is rotting, water is added everyday due to which 2” long white colour eel is automatically born like pests are born automatically in gutter. The walls of pits are covered by millions of eels and factory owners with the help of machine crush the pulp with the eels who also become paste. This action is repeated many times during 5-6 months.
The pulp is thus ready as roots and millions & millions of pests and insects crushed and pasted together. This paste is then passed through round mesh and made into small balls and then polished. This is saboodana.
Now I know why many people don’t eat Saboodana treating this as non-vegetarian.
If you find it appropriate and if you think after reading this one cannot relish Saboodana, pass on to those whom you want to save from this tasty food
முதல் பின்னூட்ட ஊக்கத்துக்கு நன்றிங்க கண்ணன் அவர்களே.
நீங்கள் சொன்ன செய்தி உண்மையாகவே இருக்கலாம்.. ஆனால், இப்படி ஒவ்வொரு பொருளும் தயாராகும் நிலையை அறிந்தீர்களானால் சர்க்கரை, உப்பு முதற்கொண்டு எதையுமே உண்ண முடியாத நிலைமை தான் உண்டாகும்.
என்ன செய்வது, நமது உலகம் மாசுபட்டுக் கொண்டே தானே இருக்கிறது.. நம் குழந்தைகளுக்கு அத்தகைய தூசும், வெப்பமும், நச்சும் நிறைந்த உலகத்தைத் தானே பரிசாக நாம் விட்டுச்செல்ல உள்ளோம் என்பதும் கசக்கும் உண்மை தான் அல்லவா??
Post a Comment