RSS

Sunday, December 2, 2007

மழை...!!


மழை..!!




மழை இரவில்
கருக்கல் பயணம்..!!


ரகசியம் பு(உ)ணர
கரு மேக முகடு
கவ்விய இரவை
போர்வையாக்கியதால்
புலப்பட்டது காரிருளாயினும்
காட்டிக்கொடுக்க காத்துக்கிடந்தன
வானத்து எட்டப்பர்கள்..!!


சிதறிய கொலுசின் சிப்பாய்களாய்
மேகத்திரை(சிறை) தப்பித்து
நட்சத்திர மின்மினிகள்
கண்சிமிட்டி ஒளி சிந்தி
காட்சிக் கொடுத்தன...!!



முகில்கள் தழுவலின்
ஓங்கிய உரசல்
இடிகளாய் வந்து
இடித்துரைத்துக்
காட்டிச் சென்றன..!!



முகிலின் பு(உ)ணரல்
முரண்பட்டதால்
வாள் கொண்டு
போரிட்டதை மின்னல்
வெட்டி வெட்டி
வந்துரைத்துப் போயின..!!



மேக மைந்தன் முரணில்
முட்டி வென்றதால் வானம்
மகிழம்பூக்களாய் முகில்ப்பூக்கள் தூவி
வரவேற்க..!! - பூமிக்கு
பூமழையாக பொழிந்ததுவே..!!
__________________
~பூமகள்.

2 comments:

பால கணேஷ் said...

நயத்தகு கற்பனை! ரசனைக்குரிய வரிகள்! மழைப் பிரியனான எனக்கு மிக ரசனைக்குரிய கவிதை இது! இன்று வலைச்சரத்தில் உங்கள் படைப்பை அறிமுகம் பெற்றிருக்கிறீர்கள். நல்வாழ்த்துக்கள் பூமகள்!

http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_23.html

S.டினேஷ்சாந்த் said...

மழையை பற்றி சில கவிதைகளை படித்திருக்கிறேன்.ஆனால் உங்கள் கவிதை வித்தியாசமாக இருக்கிறது.அருமையான கவிதை.