முதல் பள்ளி ஆயத்தம்,
முதல் கல்லூரி நுழைவு,
முதல் நேர்முகத் தேர்வு,
முதல் வாங்கிய வேலை,
முதல் மாதச் சம்பளம்,
முதல் வெற்றி,
முதல் காதல்,
முதல் முத்தம்,
முதல் ஸ்பரிசம்..
முதல்களின் நீளங்கள்
முடிவிலியாகினும்..
உன் மென்பஞ்சு
கால் கொண்டு
என் வயிற்றில் நீ தந்த
முதல் உதைதனை
நானுணர்ந்ததுக்கு ஈடாகுமா??!!
என்னுள் வளரும் இளம்பூவே..!
உனை உணர்ந்த கணத்தில் தான்
நான் முழுதாகினேன் கண்ணே...!!
-- பூமகள்.
7 comments:
அட! எனது பின்னூட்டம் கூட முதலாக இருக்கிறது இங்கு.
தாய்மையின் உணர்வினை வார்த்தைகளில் அத்தனை எளிதாக வடித்திட இயலாதுதான்.
அருமையான கவிதைக்கு நன்றி.
ரொம்ப நன்றிங்க..
எப்படியோ முதலாவதா வந்து வாழ்த்து போட்டுட்டீங்க.. கிரேட்..
நிமிடத்தில் எழுதிய கவிதை.. கவிதை எழுதி நாளாகிவிட்டதே என்ற குற்ற உணர்வில் நான் மாட்டிக் கொண்டதன் பலன்..
உங்கள் ஊக்கம் கண்டு மகிழ்ச்சி.. நன்றி. :)
அருமைங்க!
wow
arumai poo
@ கபிலன்,
ரொம்ப நன்றிங்க. :)
@ பாலா,
நன்றிங்க பாலா. :)
தாய்மையின் உணர்தல்
எதைவிடவும் முதலாவதாகதான் இருக்க முடியும்.
உங்கள் உணர்தல் எழுத்து வடிவில் எங்களையும் ஸ்பரிசித்தது.
தாயும் சேயும் என்றென்றும் நலமுடன் வாழட்டும்
இங்கே வரவும்
http://blogintamil.blogspot.com/2009/07/blog-post_28.html
அன்புடன்
ஆதவா
Post a Comment