RSS

Tuesday, July 27, 2010

இல்லாத இல்..!


இருளோடு இயைந்து
இமை மூடும்
நேரத்தில்
கனவுகள் தொலைத்து
ஒரு பயணம்..

வேரோடு பெயர்த்தெடுத்து
புகுந்த வீட்டில்
வேர்விடும் முன்னே
தாக்கும்
வெட்டுக் கிளிகளின்
விடம்
அன்பிலை பரப்பாமல்
அழிக்கப் பார்க்கும்...

நிம்மதியை நாடி
நிதம் நினைத்து
பதமாக புறப்பட்ட
நாட்களெல்லாம்
கானலானது
கண் முன்னே..

அதிகாலை
அவசர அவதியில்
அப்பாவோடு
போட்டிக்கு நின்று
முதலாய் கிளம்பிய
நாட்கள் கனவில்
நடைபயின்றபடியே..

இளைப்பாற ஓடி
தினம் சாயும்
நாற்காலிச் சண்டை
இனி இல்லை வீட்டில்..

அந்நிய நாட்டிலிருந்து
ஆசையாய் வந்தாலும்
இல்லத்தரிசி என்ற பட்டத்துடன்
இல்லம் மாறியதும்
அந்நியமாகி
மறைந்து போகின்றது
அனைத்துமே..!


--பூமகள்.

5 comments:

விக்னேஷ்வரி said...

அழுத்தமான வரிகள். மிகப் பிடித்தமாய் இருந்தன தோழி.

Madumitha said...

வலி உணர்த்தும் வரிகள்.

VELU.G said...

நல்லாயிருக்குங்க

'பரிவை' சே.குமார் said...

வலி உணர்த்தும் வரிகள்.

யாரோ said...

பிறந்த வீடு ....புகுந்த வீடு ...மாற்றம் தரும் தடுமாற்றம் இயல்பே....

அதனை தாண்டி வரும் மனமற்றம் கொண்டு தரும் வாழ்வின் இனிமையை :)