RSS

Saturday, October 16, 2010

இயலறிதல்..!!


தூக்கத்தின் விழிப்பில்
தூரலிடும் மேகத்தின்
தூறிகை மைச் சிதறலாய்
தூபமிடும் தவிப்புகள்..!

அக்னிப் பிழம்பின்
ஆனந்த மழையினில்
அடங்கி ஏறும்
ஆட்கொள்ளும் ந(பு)கைப்புகள்..!

துயில் தொலைத்த
தூரமளக்கும் ஈரவிழி
உணர்த்தும் ஊழ்
உள்வலி என்றும்..!

காணா புதிரும்
காணும் ஆவலும்
கண்ட கனவில்
கானலாய் போகும்..!

ஆழ்மூளை அழுத்தும்
ஆழ்தூக்க குறை
அம்மா பெயருக்கு
அடுத்த பொருள் உணர்த்தும்..!
--பூமகள்

1 comments:

Philosophy Prabhakaran said...

அருமையான கவிதை... தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துக்கள்...