உனை எழுத நினைத்து
தோற்றுப் போகிறேன்
ஒவ்வொரு முறையும்
நான்..!!
வார்த்தைகளுக்குள் வராமல்
வழி மாறிப் போகிறாய்
நீ..!!
உனைத் தொடரவே
நான் பயணிக்க..
என் பயணங்களின் தூரம்
சொல்லாமல் செல்கிறது
காலம்..!!
வளைந்து, மறைந்து,
வேகம் கூட்டி
கண்ணாமூச்சி ஆடுகிறா ய்
நீ..!!
குழந்தைகள் விளையாட்டாய்
உனையடைய துரத்துகிறேன்
நான்..!!
இலக்கின்றி ஓடி
ஓர் இடத்தில்
நிற்கிறாய்..!!
மூச்சிரைக்கும் இதயங்கள்
பேசிக் கொள்கின்றன..!
நா ம் மௌனம் உடைக்க
முயல்கிறோம்..!
வழக்கம் போலவே
தென்றல் நமைப் பற்றி
மென்னிறகால்
கவிதை தூவிச் செல்கிறது
நம்மிருவருக்குமிடையே..!!
--
பூமகள்.
5 comments:
//வார்த்தைகளுக்குள் வராமல்
வழி மாறிப் போகிறாய்
நீ..!!//
//மூச்சிரைக்கும் இதயங்கள்
பேசிக் கொள்கின்றன..!
நாம் மௌனம் உடைக்க
முயல்கிறோம்..!//
ஓ....... அட்டகாசமான வரிகள் தோழி...
ஒட்டிக்கொண்டது மனதில்... வாழ்த்துக்கள்..
வாசிக்க வாசிக்க இதம் தரும் கவிதை
அருமை
@கவிநா,
நன்றிகள் தோழி.. மகிழ்ச்சியாக இருக்கிறது. :)
@VELU,
நன்றிங்க வேலு. தொடர்ந்து வாங்க.. :)
நல்ல முயற்சி ......மலரட்டும் கவி நெஞ்சம்....பெருகட்டும் கவி வெள்ளம் :)
இதை வாசிக்கையில் நினைவில் நிழலாடிய கவியரசர் வரிகள்...
....பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது
கொஞ்சம் அழுதால் நிம்மதி ....
பேச மறந்து சிலையாய் நின்றால்
அதுதான் காதலின் சன்னதி ....
தலைப்பின் பொருத்தம் என்னவோ ?
Post a Comment