* அன்று.. வெயில் அவர்களுக்காகக் காத்திருந்தது.. அம்மா முந்தானையின் காற்றாய் வீசும் மரத்தினடி அவர்கள்..!! இன்று.. வெயில் அவர்களுக்காக காத்திருந்தது.. தார்ச் சூடு தாங்காமல் ப்ளாஸ்டிக் கூரையடி அவர்கள்..!! ################ * மழை பிரசவிக்கும் மேகம்.. மலடானது.. மரப் பஞ்சம்..!! * கழுத்தறுந்த மரக் கொம்பு தவித்து நிற்கும் கூடிழந்த பறவைகள்.. எங்கும் கூடாரங்கள்.. குருவிகளுக்கெங்கே வாழ்வாதாரங்கள்??!! * __________________ -- பூமகள். |
Tuesday, April 19, 2011
சித்திரையின் சித்திரங்கள்..!!
Labels:
இயற்கைபற்றியகவிதை
0 comments:
Post a Comment