எறும்பு அண்ணா எறும்பு அண்ணா
எங்கே போறீங்க??
மழை வருமா மழை வருமா
பார்க்க போறேங்க…
மழையும் வந்தா வெயிலும் வந்தா
எங்கே போவீங்க..??
மண்ணுக்குள்ளே சுரங்கம் வைத்தே
ஒளிந்து கொள்வோங்க..
மழை வருகையில் புயல் வருகையில்
என்ன செய்வீங்க..??
மழைக்காலம் முடிய நீரும் வடிய
வீட்டில் விழித்தே இருப்போங்க..
பசியும் வந்தா தாகமும் வந்தா
என்ன செய்வீங்க??
வருடம் முழுக்க சேர்த்த உணவை
பகிர்ந்து உண்டே வாழ்வோங்க..
சேமித்து வைத்தே சேர்ந்தே உண்டே
நன்மை செய்தீங்க..!!
இனமும் வாழ இன்பமும் வளர
நல் வழி சொன்னீங்க…!!
இன்றே சேர்த்து இனிதே சேர்த்து
பகிர்ந்தே கொடுப்போமே..!!
பண்பும் வளர சேர்ந்தே உண்டு
பல்லுயிரும் காப்போமே..!!
--பூமகள்.
3 comments:
தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_14.html
மிக்க நன்றி கீதமஞ்சரி.. பார்த்தேன்.. அழகான கதம்பத்தில் இந்தப் பூவும் மணப்பது கண்டு மகிழ்ச்சி.
நன்றிகள் கோடி. :)
அன்பின் பூமகள்
எறும்பு - பாடல் நன்றி - பகிர்ந்துண்டு, பண்பு வளர சேர்ந்துண்டு - பல்லுயிரும் காக்கப் பாடுபட்டு - .......
கவிதை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment