RSS

Thursday, March 21, 2013

கிளிஞ்சல் புதையல்..



கடல் சிப்பிகளின்
மௌன மொழி புதிர்கள்
புனையும் அதிசயம்
புரிவதே இல்லை எப்போதும்..
கடல் சேரும் கணங்களில்
ஓடியோடி சேர்க்கும் சிப்பிகள்
கடந்த தன் துயர் பகரும்..
பாதி உடலொடு சிதிலமான
தன் வாழ்வையும்
தொலைந்து போன உரிமையாளரின் மிச்ச சுவடையும்
காட்டும் சிப்பிகள்
உறங்கிக்கொண்டே இருக்கிறது
அலைகளின் மடியில்..
கரைசேரும் கனவுகளோடு
கை சேரும் நாளுக்காக..

 
--பூமகள்.

4 comments:

பால கணேஷ் said...

கடற்கரை மணலில் கால் புதைய நனைந்து சிப்பி பொறுக்கிய பழைய காலம் மீண்டும் மனதில் நிழலாடி மனதைக் குளிர்வித்தது. கடலும் நீரும் என்றுமே அழகு.... உங்கள் கவிதையைப் போல! சூப்பருங்க பூமகள்!

பூமகள் said...

உண்மை தான். கடலின் சிப்பிகளுடன் உறவாடி மகிழ்ந்த நாட்களின் நினைவே இக்கவிதை.
உங்களை அத்தகைய நிகழ்வை நினைக்க வைத்து மகிழ்வித்தமை மனம் நிறைக்கிறது.
நன்றிகள். :)

cheena (சீனா) said...

அன்பின் பூமகள்

கடறகரையும் சிப்பியும் - மறக்க இயலாதவை. சிப்பிகளீன் மௌன மொழி புதிர்கள் இடும் - உண்மை - அலைகளின்
மடியிலே கரை சேரும் கனவுகலுடன் சிப்பிகள்.

கவிதை அருமை பூம்கள்

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் பூமகள்

கடறகரையும் சிப்பியும் - மறக்க இயலாதவை. சிப்பிகளீன் மௌன மொழி புதிர்கள் இடும் - உண்மை - அலைகளின்
மடியிலே கரை சேரும் கனவுகலுடன் சிப்பிகள்.

கவிதை அருமை பூம்கள்

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா