RSS

Saturday, August 3, 2013

விடைகளின் விடை




நகல் கலக்காத நிசமென்ற ஐயமுடன்,
விடை பகிராத வினாக்களோடு
நிதம் தொடர்கிறேன்..

நத்தையின் வேகமாய்
நகரும் நிகழ் காலத்தில்..
பருந்தின் வேகத்தில் -என்னுள்
பின்னோக்கி பயணிக்கிறாய்..

கசப்பான விடைகளையே
ருசியறிந்த செவிகள்..
இனிப்புண்ண காத்திருக்கும்
வீசப்படும் விடைகளுக்காய்..

வருங்கால நித்திரையில்
உனக்கும் வரக்கூடும்
இது போன்ற நெருக்கும் 
சொப்பனங்கள்..

விடைகள் மட்டும் அப்போது
விடையறிந்திருக்கும் 
கட்டாயம்..!


--பூ.

4 comments:

கவியாழி said...

ஆனால் நமக்குத் தெரியாமல் இருதிருப்போம்....

Yaathoramani.blogspot.com said...

ஆழமாக சிந்தனையில் விளைந்த
அற்புதமான கவிதை
தொடர வாழ்த்துக்கள்

இளமதி said...

// நத்தையின் வேகமாய்
நகரும் நிகழ் காலத்தில்..
பருந்தின் வேகத்தில் -என்னுள்
பின்னோக்கி பயணிக்கிறாய் //

எனைக் கவர்ந்த வரிகள்...

அழகிய மிக ஆழ்ந்த கருத்துக்கள் கொண்ட கவிதை! அருமை!

வாழ்த்துக்கள்!

'பரிவை' சே.குமார் said...

அழகிய கவிதை.... வாழ்த்துக்கள்...