தாரே சமீன் பர் - நிலத்தில் (பூக்கும்)நட்சத்திரங்கள்
இந்தபடத்தின்மிகமுக்கியபாடல்களில்மகத்தானபாடலாகநான்கருதும்பாடலான"மேரே மா....!!"- பாடலை சந்தங்களுக்குத் தக்க படி அப்படியே அர்த்தம் மாறாமல் மொழியாக்கம் செய்ய முயற்சித்திருக்கிறேன்..
ஒரு சில வார்த்தைகள் சரியாக அர்த்தமறியாவிடினும்.. (மன்னியுங்கள் ஹிந்தி ஆர்வலர்களே..)
உலகத்தின் அனைத்து அம்மாவும் இந்த மழலையின் சின்ன அன்பு காணிக்கை..!
பாடல்வரிகள்:
(பல்லவி)
நான் எப்பவும் சொல்லியதில்லை - ஆனாலும் இருளைக் கண்டு பயந்துடுவேனம்மா..
நான் எதையுமே காட்டுவதில்லையே.. உன் அருகாமை விரும்புவேனம்மா...
உனக்கு எல்லாம் தெரியும் தானேம்மா..??
உனக்கு எல்லாம்............ தெரியுமே என் அம்மா...!! (சரணம் - 1)
கூட்டத்தில் என்னைத் தனியே விட்டாலுமே வீட்டை தேடி வரவே முடியாதேயம்மா..
எத்தனை தூரமென்னை விட்டாலுமே. நீ என்னை மறக்க மாட்டாய் இல்லம்மா..??!!
நான் இத்தனை மோசமா சொல்லம்மா... நான் இத்தனை மோசமா சொல் என் அம்மா...!!
(சரணம் - 2)
எப்போதெல்லாம் அப்பா என்னை மேல்தூக்கியே விளையாடும் போதெல்லாம்மா...
என்னருகிலே நீயிருப்பாயே.. நான் வந்து உனை அணைச்சி கொள்வேனேம்மா.. அப்பாக்கிட்ட சொல்லியதில்லையே... - ஆனா நான் உடைஞ்சு போயிடுவேனேயம்மா..
முகத்தில் நான் காட்டியதில்லையே... மனசில் பயந்து நடுங்கிடுவேனே அம்மா...
உனக்கு எல்லாம் தெரியும் தானேம்மா..??
உனக்கு எல்லாம்............ தெரியுமே என் அம்மா...!!
நான் எப்பவும் சொல்லியதில்லை - ஆனாலும் இருளைக் கண்டு பயந்துடுவேனம்மா..
நான் எதையுமே காட்டுவதில்லையே.. உன் அருகாமை விரும்புவேனம்மா... உனக்கு எல்லாம் தெரியும் தானேம்மா..??
உனக்கு எல்லாம்............ தெரியுமே என் அம்மா...!!
பூக்கள் நடுவில் அமர்ந்து கொண்டு முட்கள் பற்றியும் யோசிப்பவள், மழைச்சாரல் தந்த ஈரம் கொண்டு வெயில் பற்றியும் பயில்பவள், குடிசையில் அமர்ந்து கொண்டு செவ்வாய் நோக்கி சிந்திப்பவள், நல்லவை தந்த தைரியம் கொண்டு அல்லவைகளைக் கொல்பவள். என் எண்ணத்தில் வளர்ந்த பூக்கள் உங்கள் முன்..
நன்றிகளுடன்,
பூமகள்.