மனது தன் அறைகள்
ஒவ்வொன்றையும் ரகசியபூட்டுகளால்
மூடிவைக்கும்..
திறக்க வரும் ஒவ்வொருவருக்கும்
ஏமாற்றமோ வியப்போ புதையலோ
நிச்சயம் காத்திருக்கும்..
விரைந்து வந்து பூட்டுடைப்பவர்
வெளியேற்றப்படுவதும்..
சாவியாகி துவாரம் நிரப்புபவர்
அங்கீகரிக்கப்படுவதும்..
அகதியானவர் வெறுக்கப்படுவதும்..
வெளியேறியவர் விருந்தினராவதும்..
மனக்கிடங்கில் கொட்டிக்கிடக்கும்
அம்மானுசம்..
இப்படியான உள்வெளியறிவதில்
தோற்றுத் தோற்றே
வென்று கொண்டிருக்கிறது
அறிவான அன்பு..!!
--பூமகள்.






