RSS

Saturday, September 22, 2007

துளித்துளியாய் கவித் துளிகள்......!!


தூங்கினாலும் தூங்காமல் சிமிட்டும்
உன் கண்கள் என் இமையில்....!!

கவிதைகள் விதையாகி
தைக்கும் நெஞ்சங்களை...!!

என்னில் விதைத்த விதை
உன்னில் மரமானது எப்படி?

வானமே வசப்படும் நீ
என் வசமாகும் போது...!!

வண்ணவோவியம் காவியமாக
சின்னத்தூரிகை தேய்ந்ததுவே...!!


இருள் களைந்து விடியும் வானம்
துயர் துடைக்கும் அன்பின் பானம்...!!

தூரிகை துப்பட்டாவில்
தலைதுவட்டும் வண்ணங்கள்...!!

சன்னலோர சாரல் விடும் தூது
மழைத்துளி சிதறல்களாய் என்னுள்...!!

மணலோடு முத்தமிடும்
புனலோடு வரும் மீன்கள்...!!


ஆயுள்ரேகையாய் மாறிப்போன
கையின் காப்புக்கள்...!!

உடைபட்ட சில்களில் சிதறிய பிம்பம்..
ஒன்றானாலும் பிரிந்தே..!!



(இன்னும் வளரும்)
-பூமகள்.


2 comments:

Unknown said...

சின்ன சின்ன கவிதைகளால் கலக்குகின்றீர்கள் பூமகள் வாழ்த்துக்கள்

பூமகள் said...

மிக்க நன்றிகள் இலக்கியன்.