RSS

Monday, September 24, 2007

தேடல்..!!

காற்றின் சுவாசத்தில்
மூச்சிரைக்க
சுகந்த தென்றலின்
சொச்சம் தேடும்
நாசிகள் இரண்டும்..!!

பிம்பத்தின் விளிம்புகளில்
இடுக்கியிருந்து
வம்பு செய்யும் காட்சியின்
மிச்சம் தேடும்
கண்கள் இரண்டும்..!!

ஒலியலையின் ஓரத்தில்
வழிந்து வரும்
சங்கீத சங்கதிகளில்
நிசப்தம் தேடும்
செவிகள் இரண்டும்...!!

எண்ணங்களின் வழியில்
எடுத்து வரும் வார்த்தைகளில்
வண்ணவரிகள் தேடும்
வடிவிதழ்கள் இரண்டும்...!!

யௌவன தேசத்தின்
சந்துகளில் சிருங்காரிக்க
மோகன யோகம் தேடும்
இதயங்கள் இரண்டும்...!!

சிக்காத கணங்களை
சிறைபிடிக்க எண்ணி
அகன்ற வெளியில்
காத்து நின்று தேடும்
கைகள் இரண்டும்..!!

பாலைவன பரப்பில்
பூக்களின் களம் காண
பாதைகள் தேடும்
பாதங்கள் இரண்டும்..!!

-பூமகள்.

2 comments:

rahini said...

நல்ல கவிதை வரிகள் பூமகள் ம்ம்
பெயரும் கூட அழகுதான்

பூமகள் said...

நன்றி சகோதரி ராஹினி.
உங்கள் தளத்தின் கவிதையும் சுவைக்க ஓடி வருகிறேன்.

உங்க விமர்சனத்துக்கு நன்றிகள். தொடர்ந்து வாருங்கள்.