துரத்தப்படாத
அப்பிய
தூக்கம்
முகத்தில்
தூக்கலாய்...
அவசர நிலை
பிரகடணம்
நான்கு புள்ளி
கோலம்
வாசல் வரவேற்பாய்...
இம்சை செய்யும்
குழந்தைக்காய்
இரண்டு
இட்லி ஊட்டல்
போராட்டம்
மினி சீரியலாய்...
அள்ளி முடிந்த
அரையடி கூந்தல்
அவரசக் குளியல்
நேர மிச்சமாய்...
சேலை தவிர்த்து
சுடிதார் தரிப்பு
வேகக் கூட்டல்
வசதி மிக்கதாய்..
தலை
துவட்டலோடே
தொலைந்து போகும்
தினம்
பேருந்துப் பயணம்
தீரும் கணங்களாய்...
இரை உண்ண
மறந்ததை
இரைந்துரைக்கும்
இரைப்பையின்
வலி
நினைவூட்டலாய்....
இத்தனையும் தாண்டி
இன்முகம் காட்டும்
என் முகம்
அலுவலக
வரவேற்பாளினியாய்....!!
-பூமகள்.
1 comments:
வணக்கம்
23,3,2013இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் அருமையான கவிதை பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/03/blog-post_23.html
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
Post a Comment