RSS

Thursday, July 10, 2008

மலர்ந்தவையும் மலராதவையும்..!


மலர்ந்தவையும் மலராதவையும்..!



மலர்ந்தும்
எங்களில் வாசமில்லை...!

மலராத
எங்களில் நேசமில்லை...!

மலர்ந்ததால்
உலர்ந்தது..
எங்களின்
வாழ்க்கை..!

மலராததால்
புலரவேயில்லை
எங்களின்
வாழ்க்கை..!

காய்க்காத பூவானது
எம் குற்றமா??

மலராத மலரானது
எம் குற்றமா??

பூ காய்ந்தாலும்..
காயாது
எங்கள் மேலான பழி..!

மொட்டவிழ்ந்தாலும்
அழியாது
எங்கள் மேலான சுழி..!

உருவாக்காததால்
நாங்கள்
இல்லத்தில் இருந்தும்
இல்லாமலானோம்..!

உருவாகாததாலே
நாங்கள்
இல்லத்தில் இருக்காத
இல்லாதவர்களானோம்..!

அறிவியல் விடியலில்
மூச்சுப் பிடித்து
காத்திருப்போம்..!!

மலர்தலும்
காய்த்தலும்
புலரும் நம்
வாழ்வில் வா...!!

__________________
--- பூள்.

2 comments:

cheena (சீனா) said...

அன்பின் பூமகள் - மலர்ந்ததும் மலராததும் - கவிதை அருமை - இயல்பான நடையில் இயல்பான சொற்கள் - இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

நல்ல கவிதை!