RSS

Wednesday, April 21, 2010

கரைந்த அன்பு…!



அன்றும் அதே
புன்னகையோடே
விடைபெற்றாய்..

இறுதியில் இனிக்கும்
நெல்லிக்கனியாய்
இனிக்காமல் போனது
உன் முத்தம் அன்று..

நீ தந்த முத்தக் குவியலை
முகர்ந்து பார்க்கிறேன்
உன்னிடமிருந்து நான்
ஆசையாய் கேட்டு வாங்கிய
கைப்பையில்…

இறுகப் பற்றிய
உன் விரல் இடுக்குகள்..
கொடுத்த நடுக்கம்
இன்னும் என்
விரல்களில் மிஞ்சி நிற்கிறது..

நீயின்றி போன
வீடும் தாழ்வாரமும்
வெறுமையைக் குலைத்து
எனைப் பார்த்த கணத்தில்
என்னுள் அப்பி அழுகிறது..

வரவேற்கத் தேடும் உன் விழி
தொலைந்து போன
அந்த முற்றம் நிரம்பிய
சோகம் தாளாமல்..

இப்போதெல்லாம்
நான் ஊருக்குப்
பயணிப்பதே இல்லை..
என் செல்லப் பாட்டியே…!!

8 comments:

VELU.G said...

அழகான கவிதை

க.பாலாசி said...

அருமையா இருக்குங்க....

Madumitha said...

முதல் மற்றும் மூன்றாம்
தலமுறைக்குமுள்ளப்
பிணைப்பைச் சொன்னக்
கவிதை நன்று.

பூமகள் said...

@velu, @க.பாலாசி,

ரொம்ப நன்றிங்க.. :)

@மதுமிதா,
உண்மை தான்.. தலைமுறை பட்டியலில் முதலுக்கும் மூன்றாம் சங்கிலிக்குமான பிணைப்பு அளவிடமுடியாதது..

கவிதை படித்து பின்னூட்டமிட்டமைக்கு நன்றிங்க மதுமிதா. :)

ரிஷபன் said...

இறுகப் பற்றிய
உன் விரல் இடுக்குகள்..
கொடுத்த நடுக்கம்
இன்னும் என்
விரல்களில் மிஞ்சி நிற்கிறது..
அதை அப்படியே உணர முடிந்தது வரிகளில்.. லா.ச.ரா. சொல்வார்.. நெருப்புன்னு எழுதி படிச்சா சுடணும்னு..

கவிநா... said...

உடனே என் பாட்டியை போய் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது உங்கள் கவிதை... ஒரு விதமாக நெகிழ்ந்தேன்....

பூமகள் said...

@ரிஷபன்,

ரொம்ப நன்றி ரிஷபன்.. உண்மையான உணர்வுகள் வார்த்தைகளாகையில் கவித்துவம் அதிகரித்துவிடுகிறது போலும்.

@கவிநா,

மறக்காம உங்கப் பாட்டியை நான் கேட்டதாக சொல்லுங்க. :) அந்த உணர்வு என் படைப்புக்கு வெற்றி. இழந்த என் பாட்டி நிச்சயம் மகிழ்வார்.

பின்னூட்ட ஊக்கத்துக்கு நன்றிகள் கவிநா.

Anonymous said...

நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு