பந்தொந்தொன்று கொண்டு
நாம் இருவரும் விளையாட
எத்தனித்தோம்..
உருண்டு திரண்டு
இருந்த அதுவோ
அழகான தன்
விசையால் நம்மை
பிணைத்துக் கொண்டே இருந்தது..
இருவரிடமும் மாறிமாறி
இடம் பெயர்ந்து ஒரு நாள்
ஓய்ந்து கொஞ்சம்
துயில் கொண்டது..
வேடிக்கைப் பார்க்கும்
வேண்டிய கூட்டம்
தருணம் பார்த்து
அதைச் சுட்டுச் சென்றது..
உணர்வுகள் தொலைத்த நம்மில்
உறவுகளின் தூபம்
தூவப்பட்டது..
வார்த்தைகள் வலிக்க
வரையப்பட்டது உறவுகளுக்காக
ஓர் அக்னியுத்தம்..
உடைந்து அழும் குரலொன்று
இடையிடை நம்மில் வந்தமர்ந்தது..
எங்கென ஆராய
ஓர் மூலையில் உறவுகளால்
கிழிக்கப்பட்ட நம் உணர்வுப் பந்து
செயலற்றுக் கிடந்தது..!!
__________________
-- பூமகள்.
-- பூமகள்.
2 comments:
நன்று .
கவிதை உணர்த்தும் கருத்து அற்புதம் !
மனிதர் உணர்வுகுவியலாய் மாறி உறவுகளை நாசமாக்கும் கொடூரம் ஒவ்வொரு கணமும்...
Post a Comment