மாலை நேர வெயில்..
இளஞ்சூட்டு சூரியன் இதம்..
மொட்டை மாடிக் காற்று..
இனிமை தரும் குயிலோசை..
விரல் தொடும் தூரத்து தென்னங்கீற்று..
இத்தனை தரும் சுகத்தைத் துறந்தாலும்
அதனினும் இனியதாகிவிடுகிறது..
என் மழலை எச்சில் படுத்தி
எனக்கு இன்முகத்தோடு ஊட்டும்
அன்புணவுத் தருணம்..!!
1 comments:
:) ஆண்குழந்தையா பெண்குழந்தையா...
Post a Comment