குளிர் பாறை தொடும்
பனித்துளி நீர் ஓடை..!!
கரை மணல் தீண்டும்
அலை கடல் மேடை..!!
மலைப் பள்ளம் விழும்
கதிரவன் ஒளி மாலை..!!
இவையாவும் தரும்
இன்பம் தோற்க்கடிக்கும்
மலர் பொன்னுடல்
ஆடி வரும் என்
அன்பு மகளின்
அன்ன நடை..!!
இது வண்ணத்துப்பூச்சிகளின் வீடு...!!
4 comments:
உண்மைதான்... தளிர் நடை அப்படிதான் இருக்கும்.
பாராட்டுக்கள்... (கவிதைக்கு உண்மையும் அழகுதான்)
கவிதை நன்று... ஏன் இன்னும் இன்ட்லியில் இணைக்கவில்லை...
கவிதை நன்று
குழல் இனிது யாழ இனிது பூமகள் கவியும் இனிது :)
Post a Comment