மகிழம் பூ முகம்
தாழம் பூ மனம்
அல்லிப் பூ சிரிப்பு
அந்திமந்தாரை வனப்பு
அகில் தேகம்
வர்ணிப்புகள் வடித்த
கவி மனம்..
ஏங்குவதென்னவோ
வெள்ளை நிற
நெட்டை நங்கைக்கு தான்..!
கருப்பிங்கு அவமானம்..
கருப்பழகிகள் நிலையோ
அந்தோ பரிதாபம்..!
நகை கூட போட்டால்
கருப்பிங்கு ஏற்பாம்..
நகைக்காய் வாங்கும்
பொருளா பெண்கள்??
வரதட்சணை வடிவம்
வேரோடு பிணைந்து
இப்படி ஒரு நிலை வரலாம்..!
பெண் உள்ள வீட்டின் முன்
'பெண்கள் விற்கப்படும்'
பலகையும் மாட்டப்படலாம்..!
--பூமகள்.
3 comments:
:((
இதபத்தி காலம் காலமாதான் எழுதுறாங்களே!! புதிதாய் நீங்கள் தெருவில் கண்ட காட்சி.. அதை உங்களுக்கு பிடித்த ஒன்றோடு ஒப்புமைபடுத்தி கவிதையாக சொல்லுதல் அருமையாக இருக்கும்..
அய்யய்யே உங்களுக்கு ஆம்பளைங்கள பத்தி தெரியலைங்க.. வெள்ளையா இருக்கிறவங்க எல்லாரும் அழகுன்னு சொல்லிடமுடியாது.. முகம் கலையா இருந்தா வெள்ளையோ, கருப்போ எல்லாரையும் புடிக்கும்..
அன்பின் பூமகள்
கருப்போ வெளுப்போ - மனதிற்குப் பிடித்தவரை மணமுடிக்க வேண்டும் - அவ்வளவுதான் - வரதட்சனை எல்லாம் இரண்டாம் பட்சம் தான் - கவிதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment