RSS

Thursday, March 3, 2011

கதை கதையாம் காரணமாம்..!!


அன்றிரவும்
அப்படியாகத் தான்
ஆரம்பித்தேன்
கதை சொல்ல..

காகம்
பாட்டியிடம்
வடை திருடிய கதை..
திருந்தப்பட்டது
இப்படியாக..

பசிப்பொறுக்காத காகம்
பாட்டியிடம் வாங்கிய வடை
தந்திர நரி பறித்துப் போக…

புதிய கதைமாந்தராய்
பாட்டி அருகில்
இருவடையுடன்
என் குழந்தை…

காக்கை அழுகை
பொறுக்காமல்
தன் இருவடையும்
கொடுத்துச் சிரித்தது
குழந்தை..

நல்லவை விதைக்க
இதைப் போலவே
எல்லாக் கதையிலும்
அரும்பிவிடும்
புதிய பாத்திரம்
என் குழந்தை வடிவில்…!!

--பூமகள்.

3 comments:

sathishsangkavi.blogspot.com said...

//நல்லவை விதைக்க
இதைப் போலவே
எல்லாக் கதையிலும்
அரும்பிவிடும்
புதிய பாத்திரம்
என் குழந்தை வடிவில்…!!//

உண்மைதான் குழந்தைகளுக்கு நல்லவை விதைக்க விதைக்க அவர்கள் வளர்ச்சி அற்புதமாக இருக்கும்...

middleclassmadhavi said...

நல்ல குழந்தையை உருவாக்குவது தாய் தானே!!

யாரோ said...

Cute !