விழும்புகளின் விசும்பல்கள்
கேட்பதே இல்லை யாருக்கும்..
உயிரோசைகளின் சத்தமெல்லாம்
மலையுச்சியின் விழும்பின்
காதுமடலெங்கும் ஒலித்தொலித்து
மரத்துக்கிடக்கின்றன..
குயிலோசை கூட அறியாதபடி..
மரத்தின் உச்சிக்கொம்பெங்கும்..
இளந்தளிர்களின் ஓசை
புரிவதே இல்லை அதிலேறும்
குரங்குகளுக்கும் குருவிகளுக்கும்..
கிளை முறிந்து விழும் தருணங்களை
நடுங்கியபடி எதிர்கொள்கின்றன அவை..
இறுதிக் கணங்களின்
சுமையான படுக்கையின்
பழுப்பேறிய தலையணையில்
விசும்பிக் கரைந்த துயர்
புரிவதே இல்லை யாருக்கும்..
தன் மரணம் வரும்வரையிலும்..
--பூமகள்
3 comments:
மிக மிக அருமை
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
//இறுதிக் கணங்களின்
சுமையான படுக்கையின்
பழுப்பேறிய தலையணையில்
விசும்பிக் கரைந்த துயர்
புரிவதே இல்லை யாருக்கும்..
தன் மரணம் வரும்வரையிலும்..//
classic
பழுப்பேறிய தலையணையில்
விசும்பிக் கரைந்த துயர்//அழுகையால் நிறம் மாறியதை யார் அறிந்தார்கள்?
Post a Comment