RSS

Thursday, October 17, 2013

துளித்துளியாய்..! - 2

மழையின் வெள்ளத்தில்
அடித்துச் செல்கிறது
மனத்தின் வெப்பம்..!!

&&&&@@@@&&&&&

இடியின் இடிபாடுகளின் வழி
மேக முறைப்புகளுக்கு பயந்து
தம் துயரெல்லாம் கவிழ்ந்து வடிக்கும்
ஓர் செம்பருத்திப் பூவின்
மகரந்தத்தில் ஒடிங்கியிருக்கும்
ஓர் மழைத் துளி..!

&&&&

இருளெல்லாம் நனைக்கிறது
இரவுப் பணி முடித்து
எழுப்புகிறது விடியலை - மழை..!!

--பூ.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வரிகளில் நனைந்தேன்...! வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் said...

நனைய வைத்து ரசிக்க வைத்தன.

'பரிவை' சே.குமார் said...

நனைய வைத்து ரசிக்க வைத்தன.