தூரத்து பனிச்சிகரத்திலிருந்து
உருளும் ஒற்றைப் பனித்துளியாய்
கடந்து கொண்டிருக்கும்
காலமும் காற்றும்
உன் கவிதைகளை
நினைவுச்சிகரத்திலிருந்து
கடத்திக் கொண்டேயிருக்கின்றன
சுவடுகள் விட்டதை அறியாமல்..!!
--பூ.
&&&&&&
மழை தனித்து வருவதேயில்லை..
கொஞ்சும் மேகத்தோடு
இடி இசையில்
உன் நினைவுகளையும்
பொழிந்துவிடுகிறது என்னில்..!!
--பூ.
&&&&&
3 comments:
துளித்துளியாய் ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
அழகிய கவிதை வரிகள்! அருமை!
ரசிக்கக் கொடுத்த இரு துளிகளும் அருமை...
வாழ்த்துக்கள்.
Post a Comment