Thursday, March 25, 2010
கணினித் தோட்டம் -- ஒரு கண்ணோட்டம்
இணையம் வந்த பின்பு, இணைய வழி விளையாட்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வந்தவண்ணமே இருக்கின்றன. பொதுவாகவே, இயற்கை மீதான என் பற்று அதிகம்.. அதை பல இடங்களில் என் நிஜவாழ்க்கையிலேயே உறுதிப்படுத்தியும் இருக்கிறேன்..
இறைவன் என்ற ஒருவர் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கு அப்பால், எனக்கு டார்வின் கொள்கை மீதும், இயற்கை கொடுத்த பரிணாம வளர்ச்சியின் மீதும் நம்பிக்கை அதிகம். ஆக, என்னைப் பொறுத்த வரை, இயற்கை நம் வாழ்வின் ஆதாரம். ஆணி வேர்.
சமீபத்த்தில், இணைய வழி நட்பு வட்டத்தை ஓர் இடத்தில் இணைக்கும் பாலமாக விளங்கும் பேஸ்புக் என்றதளத்தில் ஓர் விளையாட்டு எதேட்சையாக காண நேர்ந்தது. அவ்விளையாட்டின் பெயர் ஃபாம் வில்லே.(FarmVille). இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால், கணினித் திரையினுள் உங்களுக்கான ஓர்தோட்டம்.
அந்த ஃபாம் வில்லேயில் உங்களுக்கு பிடித்த காய்கறி, கனிகள், மரம், செடி, கொடி, பூக்கள் என ஒவ்வொருபடியாக முன்னேறுகையிலும் பயிறிட்டுக் கொண்டே போகலாம். உங்களுக்கென்று சொந்தமாக வீடு, தங்கக்குவியல் என அமர்க்களப்படுத்தலாம். அதாவது, ஓர் வெற்று நிலத்தை உழுது, பயிறிட்டு, உரமிட்டு, அறுவடைக்கான கால இடைவெளி விட்டு தகுந்த நேரத்தில் அறுவடையும் செய்யலாம். இத்தனையும் கணினியின் உள்ளே… நிஜத்தில் தோட்டம் வைக்கக் கூட இடமில்லாத அடுக்குமாடி குடியிறுப்புகளில் இறுகியிருக்கும் மனங்கள் இந்த விளையாட்டில் தன்னைத் தொலைத்துக் கொண்டிருப்பது இயல்பே.
இவ்விளையாட்டை விளையாடும் போதெல்லாம், என் அடிமனதில் ஓர் ஓரத்தில் இயற்கை சார்ந்த சமூகப்பிரச்சனைகளும் நினைவுக்கு வருவது உண்மையே.
1. இங்கே இத்தனை மரங்களை நட ஆர்வமாக இருக்கும் நாம், எத்தனை போராடியும் நம் வீட்டின் முன்னால் வெட்டி வீழ்த்தப்பட்ட சாலையோர மரங்களைக் காப்பாற்ற முடியவில்லை என்ற ஆதங்கம் ஒருபுறமும்,
2. பல வருடங்களாக, நிழல் கொடுத்து, பல பறவைகளுக்கு வீடாகவும், நெடுஞ்சாலையின் வாகனப்புழுதியையும் புகையையும் போக்கும் அரணாகவும் விளங்கிய பல நூறு மரங்களை ஒரே நேரத்தில் சாலையகலப்படுத்துவதற்காக வெட்டி வீழ்த்திய அரசை எதிர்த்து ஒருகுரலும் எழுப்பாமல் விட்ட கோபம் மறுபுறமும்,
என இயற்கை மீதான என் பற்று நீண்டுகொண்டே போகிறது. ஆனால், இந்த ஃபாம் வில்லே பார்த்த பின்பு, கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் விவசாய நிலங்கள், அத்தனை விளை நிலங்களும் விலைபோய் அடுக்குமாடிகள் ஆகி மழை அருகிவரும் இவ்வேளையில், எனது இந்த பதிவும் முக்கிமானதாகவே படுகிறது.
இனி கணினியில் மட்டுமே மரங்களை வளர்த்தும், வயலமைத்தும் பார்க்க நேர்ந்துவிடுமோ என்ற அச்சமும் கூடவே எழுகிறது. அத்தகைய அச்சத்தில் இருக்கும் உண்மையும் ஓங்கி உறைக்கவே செய்கிறது.
அந்த நிலை வராமல் இருக்க என்ன செய்யலாம் என்ற சிறு எண்ணப்பொறியை உங்களுக்குள் என் இப்பதிவு உருவாக்குமேயாயின் நான் கடுகளவேனும் மகிழ்வேன்.
என்ன செய்யலாம் என்று நீங்களே சொல்லுங்களேன்.. மாற்றத்தை எங்கிருந்து கொண்டு வரலாம்.. எப்படிகொண்டு வரலாம்????
அன்புடன்,
பூமகள்.
Labels:
கட்டுரைகள்
Saturday, March 13, 2010
வந்துட்டோம்ல..!!
என்னங்க எல்லோரும் நல்லா இருக்கீங்களா? நானும் நலமே. சொந்த காரணங்களால சில மாதங்களா என்னால எழுத நேரம் ஒதுக்க முடியாமல் இருந்தது… இப்போது கொஞ்சமேனும் ஒதுக்க முடியும் என்ற நம்பிக்கையில் எழுத தொடங்கிட்டேன்..
எழுதி ரொம்ப நாள் ஆனதாலோ என்னவோ எதைப் பத்தி எழுதறதுன்னே புரியலை.. ஏன்னா.. அத்தனை விசயம் மூளையில வந்து முண்டியடிக்குது..
எனக்கும் எழுத்துக்குமான இந்த பெரிய இடைவெளி எந்தளவுக்கு என்னைப் பக்குவமாக்கியிருக்குதுன்னு தெரியலை.. நிறைய விசயங்களை நான் இழந்திருக்கேன்.. பெற்றும் இருக்கேன்..
நிறைய அனுபவம்.. புதிய தைரியம்.. துயரம்.. மகிழ்ச்சி.. என கலந்த கலவையா இந்த இடைவெளி நிரம்பியிருக்கு..
எல்லாவற்றைப் பற்றியும் எழுதனும்.. எழுதுவேன்..
இத்தனை நாளும் ஏக்கத்தோடு என் ப்ளாக்குக்கு வருகை தந்து படிக்கக் காத்திருந்த என் இனிய வாசகர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.. தொடர்ந்து ஆதரவு கொடுங்க.
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் விசயத்தோட வந்துட்டோம்ல…!! ;-)
எழுதி ரொம்ப நாள் ஆனதாலோ என்னவோ எதைப் பத்தி எழுதறதுன்னே புரியலை.. ஏன்னா.. அத்தனை விசயம் மூளையில வந்து முண்டியடிக்குது..
எனக்கும் எழுத்துக்குமான இந்த பெரிய இடைவெளி எந்தளவுக்கு என்னைப் பக்குவமாக்கியிருக்குதுன்னு தெரியலை.. நிறைய விசயங்களை நான் இழந்திருக்கேன்.. பெற்றும் இருக்கேன்..
நிறைய அனுபவம்.. புதிய தைரியம்.. துயரம்.. மகிழ்ச்சி.. என கலந்த கலவையா இந்த இடைவெளி நிரம்பியிருக்கு..
எல்லாவற்றைப் பற்றியும் எழுதனும்.. எழுதுவேன்..
இத்தனை நாளும் ஏக்கத்தோடு என் ப்ளாக்குக்கு வருகை தந்து படிக்கக் காத்திருந்த என் இனிய வாசகர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.. தொடர்ந்து ஆதரவு கொடுங்க.
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் விசயத்தோட வந்துட்டோம்ல…!! ;-)
Labels:
அறிமுகம்
Thursday, August 13, 2009
பூ - பூவின் பார்வையில்..
பூ - பூவின் பார்வையில்..
நடிப்பு: ஸ்ரீகாந்த், பார்வதி
இயக்கம்: சசி
இசை: S.S.குமார்
பூ படம் பற்றிய விமர்சனம் எழுத வெகு நாட்களாக மனதுக்குள் போராட்டம்.. நேரம் அமைந்தது இன்று தான்.
அழகான உணர்வு தரும் சுகந்தத்தை படம் முழுதும் நுகர்ந்து கொண்டே இருக்க முடிந்தது.
மளிகைக் கடை வைத்திருக்கும் தனது அன்பான கணவருடன் தான் நடத்தும் இல்லறத்திலிருந்து துவங்குகிறது படத்தின் நாயகி மாரி(பார்வதி)யின் அறிமுகம்..
தனது ஊர் திருவிழாவுக்குச் செல்ல வெகு நேரம் கணவருடன் அடம் பிடித்து ஊருக்குச் செல்ல முதல் ஆளாக பேருந்துக்காக காத்திருக்கும் இடம் அழகான பதிவு.. புளுதி பறக்கும் வெயிலில் பேருந்து வரும் திசையின் வெட்ட வெளி நோக்கி காத்திருக்கும் மாரியோடு சேர்ந்து நாமும் கொஞ்சம் வியர்ப்போம்.. பேருந்தில் ஏறி கம்பியினூடே தலை சாய்த்தபடியே மாரி தனது பழைய நினைவுகளுக்குச் செல்ல பேருந்து ஊர் நோக்கி முன்னேறுகிறது..
தனது மாமன் மகன் தங்கராசு(ஸ்ரீகாந்த்) மேல் உயிரினும் மேலான அன்பு வைத்திருக்கும் மாரியின் அன்பை அந்த அற்புதக் காதலை ஒவ்வொரு காட்சியிலும் வெகு இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குனர் சசிக்கு எனது மனமார்ந்த பாராட்டு..
ஸ்ரீகாந்த் இத்தகைய கதையைத் தேர்ந்தெடுத்து நம் மனங்களில் வெகு உயரத்துக்குச் சென்றுவிட்டார்.. சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு மத்தியில் இவரின் மனப்போராட்டமும், தவிப்பும் படத்தில் வெகு அழகாக காட்டப்பட்டிருக்கிறது.. வழக்கம் போல் ஸ்ரீகாந்த் வெகு அழகு நடிப்பிலும் அழகிலும்..
சொல்லப்படாத காதலின் ஆழம் சொல்ல இரு தனித்த பனைமரங்களையே குறித்திருப்பது கவித்துவம்.. சின்னச் சின்ன முக பாவங்களையும் வெகு எதார்த்தமாக வெளிக்காட்டி நிஜ கிராமியப் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார் படத்தின் நாயகி பார்வதி.
ஒரு பெண்ணாக, நாயகி உணர்ந்த எல்லா உணர்வுகளையும் வெகு அழகாக என்னில் இறக்கி ரசிக்க முடிந்தது..
தன் தங்கராசுவைக் காண ஓடோடி வந்து காத்திருக்கும் போதும்.. அதன் பின் வரும் பழைய நினைவுகளும் கதையோட்டத்தோடு நம்மை ஒன்ற வைக்கிறது..
பட்டாசுத் தொழிற்ச்சாலையில் வேலை பார்க்கும் நாயகி மாரியும், அவருடன் நட்பு பாராட்டும் தோழியும் நட்பின் ஊடல், கூடல்களை வெகு இயல்பாக காட்டி நடிப்பில் கலக்கியிருக்கிறார்கள்..
மொட்டை வெயில், பரந்த காய்ந்த புளுதி பறக்கும் வானம் பார்த்த பூமி, மாரியின் தவிப்பு என படம் முழுதும் நம்மை தவிக்க விடும் காட்சிகள் அதிகம்..
ஊர்த் திருவிழாவுக்கு வந்து சேரும் மாரி, தன் தங்கராசுவைப் பார்த்தாரா?? என்ன நடந்தது என இறந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் எதார்த்தம் நிரப்பி காட்டியிருக்கும் காட்சிகள் அற்புதம்..
மாரியின் மனம் சொல்ல.. முதல் ஓரிரு காட்சிகளிலேயே தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது இயக்குநரின் திறனை மெச்ச வைக்கிறது..
மாரியின் காலில் மளிகைக் கடை படிக்கல் விழ, மாரி அதற்கு கூட அழுகாமல் சிரித்துக் கொண்டே இருக்கும் நிகழ்வு நெகிழ வைக்கிறது.. அதற்கான காரணம் படத்தின் இறுதியில் சொல்லியிருப்பது வெகு சிறப்பு..
பாடல்கள் இசையால் மெல்ல வருடிச் செல்கிறது.. குறிப்பாக, "சொந்த வேரொடு தான் கொண்ட காதலினை.." என்ற பாடல், பாடகி சின்மயி குரலில் தேனாய் இனிக்கிறது.. படத்தின் மொத்த கருத்தையும் இவ்வொருபாடலே சொல்லிச் செல்கிறது.. படத்தின் சிறப்பான பகுதிகளுள் இப்பாடலுக்கு தனியிடம் இருக்கும் என்பது திண்ணம்..
ஒரு அழகான படம் பார்த்தால் அதன் தாக்கம் வெகு நாட்களுக்கு இருக்கும் என்பார்கள்.. அத்தகைய தாக்கத்தை என்னால் இப்போதும் உணர முடிகிறது.. அதன் தாக்கமே என் இந்த விமர்சனத்துக்குக் காரணம்..
பூ - இலக்கிய தரம் வாய்ந்த ஒரு சிறந்த நாவலைப் படித்த உணர்வை என்னில் ஏற்படுத்தியது..
மொத்தத்தில்,
பூ - புனிதம், கவித்துவம், அற்புதம்.
Labels:
திரைவிமர்சனம்
Wednesday, August 12, 2009
என் இதயச் சுவடுகள் - 2

உன்னோடு பேசிய பின்
அடுத்து உன் குரல்
கேட்கும் வரையிலும்
என்னுள் நீடித்திருக்கிறது..
உன் வார்த்தைகளின் வாசம்..
உன் வார்த்தைகளின் வாசம்..
அந்த வாசத்தில் கிறங்கி,
தூக்கத்தில் உளறும்
குழந்தையைப் போல..
ஏதோ எழுத முற்படுகிறது ..
என் மனம்..!!
தூக்கத்தில் உளறும்
குழந்தையைப் போல..
ஏதோ எழுத முற்படுகிறது ..
என் மனம்..!!
Labels:
காதல் கவிதைகள்
Wednesday, August 5, 2009
என் இதயச் சுவடுகள்...!! - 1

உனை முதலில் பார்த்த
வினாடிச் சிறகுகளின்
படபடப்பின் மத்தியில்
உன் சின்ன விழியால்
எனை பார்த்த அந்த நொடியில் தானடா..
என்னுள் வண்ணங்கள்
தோய்த்து சிறகுகள்
விரித்தது
ஓர் வண்ணத்துப்பூச்சி தேவதை...
Labels:
காதல் கவிதைகள்

