RSS

Friday, October 5, 2007

பூவின் குறும்பாக குண்டாகலாம் வாங்க...!!!

பூவின் குறும்பாக குண்டாகலாம் வாங்க...!!


நகைச்சுவைப் பகுதியாக குண்டாகலாம் வாங்க என்று தமிழ் மன்றத்தில் ஆரம்பித்து கலக்கிய பூமகளின் படைப்பு இதோ உங்களுக்காய்....!!

வாங்க வந்து குண்டாகுங்க......!!

இதோ பூமகளின் குறும்பு ஆலோசனைகள் குண்டாக வேண்டி...!!

வாங்க குண்டாகலாம்...!!

எப்படி??? இதோ இப்படி சாப்பிட்டு தாங்க.......!!!

1. ஐஸ்கிரீமை உங்க சைஸ் கப்பில எடுத்து நல்லா அப்பு அப்புனு சாப்பிடனும்... அப்போ தான் குண்டாகலாம்.


2. ஆரஞ்சு பழத்தை பார்த்து அது ஆரஞ்சு கலருல இருக்கறதால ஆரஞ்சுன்னு கூப்பிடறோமா.. இல்ல ஆறு + அஞ்சு = 11 சுளை இருப்பதால் ஆரஞ்சுன்னு கூப்பிடறோமான்னு ஆச்சரியப்பட்டு யோசிச்சிட்டு நிக்காம அப்படியே சாப்பிடுவேன் அப்படீன்னு முழுசா தினமும் 2 பழம் சாப்பிடனும்..அப்புறம் சும்மா தளதளன்னு ஃப்ரஷா இருப்பீங்க எப்பவும்..
ஆரஞ்சு கணக்கா....!!

3. கொட்டை வகைகள் அதாங்க... வேர்கடலை, பிஸ்தா, பாதாம், முந்திரி, மற்றும் ட்ரூட்டி பழ வகைகள் போட்ட கேக் வகைகளை சீஸ் போட்ட பீஸாவாகவும் தினமும் மாலை சிற்றுண்டியாக சாப்பிட சும்மா கும்முனு உடம்பு வரலைனா கேளுங்க....!!



4. மக்காச்சோளத்தை விட சிறந்த சத்துள்ள உணவு எதுவுமே இல்லீங்க... அதை நன்கு வேகவைத்து பல்லு வலிக்குதுன்னு சொல்லாம கண்ண மூடிட்டு சாப்பிட்டீங்கன்னா..
அப்புறம்.. உங்க பல்லால ரயிலையே இழுக்கலாமுங்க.....!!



5. மூட்டை கட்டி வைச்சிருக்க சாக்லட்டை தினமும் இரண்டு இரண்டு லபக் லபக்னு யாருக்கும் தெரியாம சாப்பிட்டு வந்தீங்கண்ணா... நீங்க சும்மா புசு புசுன்னு ஆயிடுவீங்க...


6. பச்ச கலர்ல இருக்கறதால பச்சை மிளகாய் உடம்புக்கு நல்லதுன்னு அசட்டுத் தனமா நிறைய போட்டு சாப்பிட கூடாதுங்க..
பச்சை மிளகாய் குடலுக்கு கெடுதல்னு டாக்டரே சொல்லியிருக்காங்க... அதனால அதை எட்டி நின்னு பார்த்திட்டே தயிர் சாதத்தை மடக் மடக்குனு சாப்பிட்றனும்...!!

7. தினமும் நல்ல பாதாம் கலந்த பிஸ்கட்டோட ப்ரோட்டின் நிறைந்த பொருளை அதாங்க.. பூஸ்ட், போன்விட்டா மாதிரி கிடைக்குமே பாலில் போட்டு குடிக்க... ப்ரோட்டின் அதிகம் இருக்கிறமாதிரி வாங்கி பாலில் போட்டு குடிங்க... சூப்பரா இருக்கும்... அதுவுமில்லாம நல்லா சுறுசுறுப்பா உங்க உடம்பு இருக்கும்....!!



8. ஆப்பிளோ மற்ற பழங்களோ அதிகமா தோலைச் சீவிட்டு சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்க...ஏன்னா... தோலில் கூட நல்ல சத்துக்கள் இருக்குதுன்னு கண்டுபிடிச்சிருக்காங்களாமா...??!!!

9. குறுமிளகு தூளை நிறைய சேருங்க பழங்களை சாலட் போல பச்சையாய் சிறு துண்டுகளாக்கி சாப்பிடுகையில்... உப்பை குறைவாகவே சேருங்கள் எப்போதும்...
அப்போ தாங்க... "கந்தசாமி" படத்தில ரொம்ப யங்கா வருகிற விக்ரம் மாதிரி க்யூட் அண்ட் ஸ்மார்ட் ஆகலாம்...

10. பழங்களை குறிப்பா கருப்புத் திராட்சையை தினமும் ஊறவைத்து சாப்பிடுங்க... அது ரொம்ப ஊறினா வைன்னுங்கலாமா.. பெரியவங்க சொல்றாங்க.. என்னவோ போங்க.. எனக்கு ஒன்னும் தெரியாதுங்க..
அப்போ சும்மா கொழு கொழுன்னு அமுல் பேபி மாதிரி குண்டாகிடுவீங்கலாமா....!!





11. பிரட் ஆம்லட்டையும் பீஸாவையும் சாப்பிட யோசிக்கவே கூடாது.. ஆனால் அது வெஜ்ஜா இருந்தா ரொம்ப நல்லது. இல்லாட்டி... இளைக்கலாம் வாங்க திரியில் இளைக்க துடிப்போர் வரிசையில் நீங்களும் போயி நிப்பீங்க.. அப்புறம் என்கிட்ட வந்து அழப்படாது.... ஆமா...!!



12. அப்புறம்.. எல்லா பிறந்த நாளுக்கும் உங்க உயரத்தில ஒரு கேக் வாங்கி வெட்டி.. அதை முழுதும் நீங்களே சாப்பிடாம.. கொஞ்சமேனும் வந்தவங்களுக்கு கொடுத்தீங்கன்னா... நீங்க குண்டாவதை யாராலும் தடுக்க முடியாது.
அப்போ... இந்த பூவுக்கு பரிசு வாங்கித் தர மறக்காதீங்க....!!




(இதை படிச்சிட்டும் குண்டாகலைனா..அதுக்கு நா பொறுப்பு இல்லீங்கோ.....!! பூவைத் திட்டிபுடாதீங்க....!! )

குறிப்பு: இந்த படத்தில இருக்க க்யூட் பொண்ணு யாருன்னு நீங்க நினைப்பது கேக்குது....அது பூமகளாகிய நான் தானுங்க... ஹீ ஹீ..!!



__________________
பூமகள்.

0 comments: