RSS

Friday, October 19, 2007

பூவின் குறும்பாக குண்டாகலாம் வாங்க!-பாகம்2

என்னை வாழ்த்திய அன்பு குச்சி குச்சி ராக்கம்மாக்களுக்காகவும், ராக்கையாக்களுக்காகவும்...எனது டிப்ஸ்கள் இதோ.....!!

1. முதலிலேயே சொன்னது போல், நீங்க எப்பவும் அழகா "சத்தம் போடாதே" ஹீரோ ப்ரிதிவி ராஜ் மாதிரி இருக்கனுமா...?? தினமும்... நிறைய ஃப்ரஸ் பழங்கள் சாப்பிடுங்க..!!
அப்புறம்... பாருங்க.....!! உங்க உடம்பே ... 10 வயசு குறைஞ்ச மாதிரி சும்மா சூப்பரா யங்கா இருப்பீங்க...!!



2. அடுத்தவங்களுக்கு 'ஐஸ்' வச்சே பழக்கப்பட்ட நீங்க, அடிக்கடி உங்களுக்குன்னும் 'ஐஸ்' சொந்த செலவில் வாங்கி சாப்பிடுங்கன்னு சொல்ல வந்தேன். எம்புட்டு பாசம் பூவுக்குன்னு நீங்க கண்ணு கலங்கறது தெரியுது.... ஆங்..................... இந்த 'ஐஸ்' எல்லாம் என்கிட்ட பலிக்காது. நீங்க உங்க காசுல தான் 'ஐஸ்' வாங்கி சாப்பிடனும்.. அப்போ தான் எடை கூடும்... இல்லாட்டி... உங்க எலும்பு எண்ணிக்கை டபுளா ஆகும்... அது என் ஆட்டோ ராசாக்களின் கைப்பக்குவம்....!!


3. பழைய சூன்யகாரி கதையெல்லாம் கண்ண முழிச்சி படிச்சிட்டு.... பரங்கிக்கா கண்ண முழிச்சி பேசுற மாதிரியும்... சிரிக்கிற மாதிரியும் கனவு கண்டுட்டு... வீட்டில வாங்கி வச்சிருக்கிற பரங்கிக்காயை செதுக்கி கண்ணு வாயி மூக்குன்னு வரைஞ்சி பரங்கிக்காயை வச்சிட்டு.... 'ஏன் பரங்கிக்காய் பேச மாட்டீங்குதுன்னு??' மலங்க மலங்க விழிக்காம..... பரங்கிக்காயை நறுக்கி... கூட்டு செஞ்சு சாப்பிட்டா...... ஆஹா.. இனிக்க இனிக்க நீங்களும் இனிப்பா குண்டாகிடுவீங்க...!!


4. வீட்டில உங்க ஆத்துக்காரிகிட்ட சப்பாத்தி கட்டையால அடிவாங்கிட்டே அழுத்திட்டு.... சமயம் பார்த்து அடிக்கு பயந்து சப்பாத்திக்கட்டையை ஒளிச்சி வச்சிருப்பீங்க...!! அப்பனா... அதை முதல்ல வெளியே எடுத்து வாரத்துக்கு 4 நாளு சப்பாத்தி தேச்சி.... (அட உங்க கையால தாங்க) 10 சப்பாத்தி அசராம சாப்பிட்டுட்டு வந்தீங்கன்னா... அப்புறம்...நீங்க சப்பாத்திக் கட்டைய பார்த்து பயப்படவேண்டியதில்ல... அந்த சப்பாத்தி கட்ட உங்க உடம்ப பார்த்து ஓடி ஒளிஞ்சிக்கும்...!!


5. குச்சில சொருகி.... கோழியை ஃப்ரை பண்ணுவாங்களே... கடையில... அது மாதிரி... நீங்களும் வெண்ணை, சீஸ் பன்னு எல்லாம் வச்சி... ப்ரை பண்ணி நல்லா காலையில ஒரு வெட்டு வெட்டனும்... (அட... நல்லா சாப்பிடுங்கன்னு சொன்னேங்க...) பக்கதுல சாப்பிட்டுட்டு இருக்குறவர வெட்டிப்புடாதீங்க..... அப்புறம்... பாருங்க.... சும்மா,..... புட்டு புட்டுன்னு ஆகிடுவீங்க...!!


6. "'பூண்டு' சாப்பிட்டா நூறு வருசம் உயிரோட வாழலாம்" என்பது எல்லா மருத்துவர்களும் ஒப்புகிட்டது(அப்படின்னு நினைக்கிறேனுங்க... சண்டைக்கு கீது வந்துறாதீங்க...!!). 'மொழி' படத்துல ப்ரகாஷ் ராஜ் சொன்ன மாதிரி... "வாழ்க்கையில் சில விசயங்களை வெள்ளப்பூண்டால கூட காப்பாத முடியாது" அப்படிங்கறதும்(பூவு முதல்ல உன்னை காப்பாத்திக்கோன்னு நீங்க சொல்றது கேக்குது..!! ) உண்மை தான். அதனால.... ரொம்ப செண்டிமெண்டா... ஃபீல் பண்ணாம நிறைய பூண்டு உணவுல சேர்த்துக்கோங்க... உங்க ரொம்ப ஆரோக்கியமா இருக்கும்.. அப்புறம்... பாருங்க.... 'ஆர்னால்ட்' எல்லாம் அந்த பக்கம் நிக்கனும்.. உங்க முன்னாடி...!!


7. பீஸா மேல இருக்கிற நட்ஸ்-ஐ(அதாங்க... பாதாம் பாதிரி கொட்டைகள்..) மட்டும் பொருக்கி எடுத்து சாப்பிட்டுட்டு பீஸாவ அப்படியே வைக்காம... பீஸாவ முழுசா நல்லா சாப்பிடுங்க... பீப்பா மாதிரி ஆகாட்டியும்... அழகா புஃவ்னு ஆயிடுவீங்க...!!


8. ப்ரட் ஆம்லட் மாதிரி பர்கர் வாங்கிட்டு... 'பன்னுக்குள்ள எப்படி கோழி வந்து ஆம்லட் போட்டுதுன்னு?' சாப்பிடாம உட்காந்து யோசிச்சிட்டு இருக்காம..... முழுசா.... 4 பர்கர் பட்டர் வச்சி... ப்ராசஸ்ட்டு சீஸ் வச்சி சாப்பிட்டீங்கன்னா... அப்புறம்.. உங்க வீட்டு வாசலை இடிச்சி பெரிசாக்கவேண்டியிருக்கும்னா பார்த்துக்கோங்களே......!! கவனமா சாப்பிடுங்க...!!


9. எப்போதும் இரவு உணவு சாப்பிட்டுட்டு விட்டு... அப்படியே குறட்டை போட்டு தூங்கிறாம... ஒரு கிளாஸ் பாலும் ஒரு வாழைப்பழமும் சாப்பிடுங்க..!நிம்மதியா தூங்குவீங்க.. கூடவே வைட்டமின் 'ஏ' மற்றும் 'சி' (அப்படின்னு நினைக்கிறேன்.. தப்புன்னா மன்னிச்சிருங்க.. மருத்துவர்களே..!!)
வாழைப்பழத்தில் நிறைய இருக்காம்.. பாலும் பழமும் இரவுணவுக்கு பின்
மறக்காதீங்க... மறந்தீங்கண்ணா... நீங்க அப்புறம் குண்டாகறதையும் மறக்க வேண்டியது தான்..!!



10. சரி... திவ்யமா சாப்பிட்டாச்சா??? பின்பு என்னங்க.... ஒரு நாளைக்கு 10 மணி நேரம் நல்லா நிம்மதியா தூங்குங்க... சரியான நேரத்துக்கு தூங்க போயிடுங்க... மூளை அதை பதிவு பண்ணி வச்சிக்குமாம்.. நீங்க அலாரம் வைக்காமலே காலையில் சீக்கிரம் எழும்பனுமா... கவலைய விடுங்க... தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு உறங்க போயிடுங்க. தூங்கும் முன் காலையில் இத்தன மணிக்கு எழும்பனும்னு மனசுக்குள்ளே சொல்லிக்கோங்க... அப்புறம் பாருங்க..டான்னு... கரக்டா மூளை அலாரம் அடிச்சி.. உங்கள எழுப்பிவிட்டுடும்... நல்ல தூக்கம் நல்லா உடம்பு வாரதுக்கு ஒரு முக்கிய காரணம்னு பெரியவங்க சொல்லியிருக்காங்கங்க...!! (இப்படி சொல்லி பூ எஸ்கேப்...!!)


11. காலையில் அவ்வளவு சீக்கிரம் எழுந்து என்ன பண்றதுன்னு நீங்க கேட்பது கேக்குதுங்க.... இருங்க இருங்க.,..பூ இவ்வளவு சொல்லிருக்கு.. இதைச் சொல்லாதா??? அப்படியே சின்ன சின்ன உடற்பயிற்சி செய்யுங்க....!! கையை காலை நீட்டி... உங்க பள்ளிக் கூடத்துல பிடி மாஸ்டர் சொல்லிக் கொடுத்திருப்பாரே..அதை செய்யுங்க...! பார்த்து பக்கத்துல அசந்து தூங்கிட்டு இருக்கறவங்கள ஆர்வக்கோளாறில் உதைத்து உதை வாங்கினா அதுக்கு நா பொறுப்பில்லீங்க....!! இப்படி செஞ்சீங்கன்னா... நிறைய தானாவே சாப்பிடுவீங்க.. விளைவு... வெயிட் தானா போடுவீங்க...!!


12. அப்படியும் நேரம் இருக்கா.... அழகா உங்க தோட்டத்துல போயி நின்னு... நேத்து வாங்கிட்டு வந்திருக்க மரம்.. பூச்செடி நாத்துகள ஒன்னொன்னா குழி தோண்டி நட்டுங்க... ஆங்.. .என்ன முனுமுனுப்பு... ஓ... நீங்க ப்ளாட்ஸ்ல இருக்கீங்களா.. கவலைய விடுங்க..
உங்க பால்கனில... பெரிய தொட்டிகள் வாங்கி... அதுல செடிகள நட்டுங்க...!! (எப்படி பதில் சொன்னாலும் ஐடியா கொடுக்கிறா பாரு பூவுன்னு கோபப்படுறீங்களோ...?? எல்லாம் உங்க மேல இருக்க அக்கறை தாங்க..)
அப்புறம் பாருங்க.. உங்க உடம்பு சும்மா 'சல்மான் கான்' மாதிரி அழகா இல்லீனா... கேளுங்க...!!



13. மரம் வெச்சவன் தான் தண்ணி விடனும்...!! நீங்க பாட்டுக்கு செடிய மட்டும் நட்டுட்டு.... அப்புறம் கண்டுக்காம விட்டுறாதீங்க... தினமும்.. உடற்பயிற்சி செய்துட்டு.. அப்படியே செடிகளுக்கு தண்ணியும் ஊத்துனீங்கன்னா... நீங்க குண்டாகிற மாதிரியே செடியும் குண்டாகி நல்லா வளர்ந்திடும்..!! அது பூவா பூத்து சிரிக்கும் பாருங்க...!! அப்போ உங்க கண்ணுல இந்த பூவு தெரிஞ்சா சரிதாங்க...!!


14. காலையில எழுந்து வேக வேகமா கிளம்பி ஆபிஸ் போகனுமா... இருக்கவே இருக்கு நூடில்ஸ் னு எடுத்து 2 நிமிடத்துல உங்களுக்கு நீங்களே ஆப்பு வச்சிக்காதீங்க... !! நூடில்ஸ் அடிக்கடி சாப்பிடுவது நல்லதில்லன்னு பெரிய விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சி சொல்லியிருக்காங்கங்க... (இப்படித்தான் சொல்லி உங்ககிட்டயிருந்து தப்பிக்க முடியும்.. நான் சொன்னதா சொன்னா கேட்கவா போறீங்க??)
அதனால கண்டிப்பா... வெறும் வயிற்றில் முளைக்க வச்ச தானியங்கள சாப்பிடுங்க..(பச்சைப்பயிறு, கொண்டைக்கடலை இப்படி..) அப்புறம்... நூடில்ஸ் சாப்பிடுவதை கூடுமானவரை அவாய்ட் பண்ணுங்க...!!
இப்போ.. உங்க உடம்பு மட்டுமில்லீங்க... இதயமும் பலமாகிடும்... சும்மா... சூப்பராயிடுவீங்க..!!



15. சரி.. இத்தனையும் கஸ்டப்பட்டு வேர்வை சிந்தி சொல்லிய இல்ல இல்ல எழுதிய பூவுக்கு உங்க அன்பு வாழ்த்துகளையும் இங்கே சொல்லிட்டு போங்க...!!



-பூமகள்.

0 comments: