அதிகாலை பனியில்
இருள் தலைதுவட்டி
இமை திறக்காமல்
காத்திருந்தது.!!
மெல்ல கண் மலர்கிறேன்.!
முகத்தோடு புன்னகை
ஒட்டும் ரோஜாவனத்துக்கு
தண்ணீர் ஊற்றுகிறேன்..!!
வாசலின் முகம் கழுவி
தென்னங்கீற்றால் தலைவாரி
பச்சை வண்ணமிட்டு
வெண் பொட்டிடுகிறேன்..!!
புள்ளிகள் தானே
கோடிட்டு கோலமாகின்றன
கற்பனை முகடில்!!
எண்ணத் திரையை
மண் தரையில்
பிரதி பதிக்கிறேன்..!!
புரிந்து போடப்படும்
இக்கோலமும் பல
ராஜகுமாரர்களுக்கு
புரியா கடவுளின் கோலம்
போலவே இன்னமும்..!!
__________________
~பூமகள்.
~பூமகள்.
2 comments:
இவ்வளவு ரசனையும் புத்திசாலித்தனமும் உள்ளவங்கள புரிஞ்சிக்க எல்லா ராஜகுமாரனாலும் முடியுமா என்ன... கோலத்தை ரசித்து முடித்து கொஞ்சம் அண்ணாந்து பாருங்க... இன்று ஒருவேளை உங்கள் சூரியனும் எதிரில் இருக்கலாம்!
அழகான விமர்சனம்..
மிக்க நன்றிகள் சிவாஜி.
ஒரு வருடம் கழித்து இக்கவிதைக்கு விமர்சனம் கண்டு மனம் நெகிழ்கிறது..
நன்றிகள் கோடி.
Post a Comment