RSS

Saturday, December 4, 2010

இன்ப இல்..!!


இன்ப இல்..!!

கனவுகள் தொலைத்த
வெற்று விழியோடு
உன் விரல் பிடித்தேன்..

மெல்லிய விரல் பற்றி
மென்னுள்ளம் உணர்வித்தாய்..

வாழ்க்கையின் வேர்
என்னில் வேரூன்ற நீர்ப்பித்தாய்..

ஒவ்வொரு நாளும்
ஓர் நொடியாக்கி வியப்பித்தாய்..

ஏதோ ஓர் நொடி
என்னில் எல்லாமாகி வியாபித்தாய்..

இனி வரும் ஆண்டெல்லாம்
இது போலே அமைய
பிரா ர்தித்தேன்..

ஈர விழியோடு
ஈராண்டு கடந்து
உனைப் பார்க்கிறேன்..

என் விழியின்
வெற்றிடம் நிரம்பிவிட்டிருந்தது..

நிரம்பியதெதுவென
எட்டிப் பார்க்கிறேன்..

ஆழ்ந்த அன்போடு
அழுத்தமாய் முத்தமிட்டு
அமைதியாய் நின்றாய்
நீ..!!

-- பூமகள்.

2 comments:

Philosophy Prabhakaran said...

நல்ல கவிதை... ஏன் இன்னும் திரட்டிகளில் இணைக்கவில்லை...

Learn said...

அருமையான கவி வரிகள் அனைத்துமே....

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in