skip to main |
skip to sidebar
மெல்லிய புன்னகை வாஞ்சை பேச்சு வஞ்சனை உள்ளம் வசிய மனிதர்..! நிஜ முகம் களைந்து பொய் முகங்களின் பேரூர்வலம் தெருவெங்கும்..... நிஜ முகங்கள் தேடி நிதம் வாடும் என் மனம்....!! முகத்தில் சிரிப்பு மொத்தத்தில் வெறுப்பு முகம் காட்டா அகம் ஏராளம்.....!! யாரிடமும் மெய்முகம் காட்ட மறுப்பதென்ன மானிடா??? உண்மையாய் உறைவது உறுத்துதோ உனக்கு....?????????? உள்மன அழுக்கை அகற்றி ஆழ்மன அழகில் லயித்துப்பார் கொஞ்சம்........ ஆன்மா பேசும் அமைதி மொழி...! அறிந்து கொள் அது நல் வழி...!
-பூமகள்.
காற்று வந்து
காது துடைத்து
கலைத்துப் போகும்
பஞ்சு மேகம்...!!
விண்ணில் கோடி
விதைகள் கொண்டு
விதைத்த பருத்தி
பஞ்சு மேகம்...!!
நட்சத்திர மழலை
கண்ணாமூச்சி ஆட
வைக்கும் பிஞ்சு
பஞ்சு மேகம்..!!
நனைந்த நிலவு
நுதல் முற்றும்
சுற்றிக் கொள்ளும்
பஞ்சு மேகம்...!!
பகலவன் கொஞ்சம்
இளைப்பாறிச் செல்லும்
சொகுசு பக்கணம்
பஞ்சு மேகம்...!!
கடலோடு
மணம் கொண்டு
கருவாகி
மழை ஈன்று
பஞ்சரிக்கும்
பஞ்சு மேகம்...!!
வானத்தோடு
மின்னல் சண்டை
அமைதித் தூது
வெளிர்
பஞ்சு மேகம்...!!
அண்டையோடு
சண்டையிட்டும்
அன்பு குழகி
ஆர்ப்பறிக்கும்
தரணி மெச்சும்
பஞ்சு மேகம்...!!
அர்த்தங்கள்:
பஞ்சரித்தல் - கொஞ்சிப் பேசுதல்
பக்கணம் - ஊர், கிராமம்
குழகுதல் - கொஞ்சுதல், வசீகரித்தல்

பேரலையோடு
பரள் பேசும்
புதுக்கவிதை
சங்கமச் சத்தம்...
பூ அவிழ
பூக்காம்பு கேட்டு
மயங்கும் மரகத
வனப்புச் சத்தம்..
இளவெயில் பட்டு
இலையூஞ்சல் ஆடும்
குயில் பாட்டு
குழையும் சத்தம்...
மூங்கில் காட்டில்
முட்டும் காற்று
முத்தம் தந்து
முனகும் சத்தம்..
மெல்விரல் படின்
இலை மூடும்
தொட்டாச்சிணுங்கி
நாணிச் சிணுங்கும்
வெட்கச் சத்தம்...
காதல் மொழி
பேசும் அழகு
பேடைக்கிளி இரண்டும்
கொஞ்சும் சத்தம்...
நள்ளிரவு நிலாநேரம்
நீரின் மேலே
தவளை தாவும்
தளுக் சத்தம்...
வண்டு வரும்
பூச்செண்டு அறியும்
ரம்மிய கமக
ரீங்காரச் சத்தம்...
கேட்கா சத்தம்
கேட்கும் நித்தம்
கேள்விக் குறியாய்
வாழ்க்கை மட்டும்..
வாழச் சொல்லி
வார்த்தை முட்டும்
சத்தமே சத்தமாய்..
சொல்லும் மனதின் சத்தம்...!!
-பூமகள்.
ஆயிரம் பூக்கள்இயைந்த மாலைஅழகாய் பிறந்துவந்தது இன்றே..!வசந்தகாலவனப்புகொண்டேவாசமுடனேவந்தது இன்றே..!வாஞ்சை கொண்டேவெள்ளி மின்னல்வானம் விட்டேவந்தது இன்றே..!வாசல் தேடிவானவில் கோடிவண்ணவெள்ளமாய்வந்தது இன்றே..!வாழ்த்துக் கூறிஆசி வழங்கஅக்கா வந்தேன்அன்பு கொண்டே..!வாழ்வு முற்றும்இன்பம் காணஇனிய வாழ்த்துகூறினேன் நன்றே..!வாழ்க நீ..!வளர்க மேலும்..!வானம் கூடதொட்டுவிடும் தூரமே..!!
-பூமகள்.
இருட்டு அப்பிய
இரவு நேரம்..
அலையும் தூங்கும்..
அந்திச் சாமம்..
ஆழ்கடல் அருகே..
தனியே பயணம்
துடிப்பே துணையாய்..
உப்புக் காற்றும்
உவர்ப்புக் கொண்டே
உறங்கும் மெல்ல..
வெள்ளிப் பரள்கள்
வான முகட்டில்
வந்து வந்து
வெளிச்சம் காட்டும்...!!
விண்ணில்
நகபதி நகர்வலம்..
நட்சத்திரத் திருவிழா..!!
வெளிச்சம் பிடிக்க..
வலையை வீசியேன்..
விண்ணை நோக்கி....
முகிலில் மறைந்த
விண்மீன்கள்..
வலையில் சிக்கின
வண்ண மீன்களாய்..!!-பூமகள்.