RSS

Friday, March 27, 2009

பூமி மணித்துளி(Earth Hour)

பூமி மணித்துளி(Earth Hour)


மனித இனத்தின் மகத்தான விஞ்ஞான வளர்ச்சியினால் பூமிக்கு உண்டாகும் கலக்கம் கொஞ்ச நஞ்சமல்ல...


அண்டார்ட்டிக் பனி உருகுதல் முதல்... ஓசோன் ஓட்டை வரை நம் எல்லைகளை நாம் விரிவுபடுத்திக் கொண்டே தான் இருக்கிறோம்...


அத்தகைய பாதகத்தை ஒரு மணி நேரமாவது நிறுத்தி கொஞ்சம் பூமியை ஆசுவாசமாக மூச்சுவிட வைத்து அதன் இயல்பில் இருக்க வைக்கும் நோக்கத்தோடும் பூமியின் மேல் மனித இனத்தின் மாசுக்கேட்டை உணர்த்தும் வகையிலும் இந்த பூமி மணித்துளி அனுசரிக்கப்படுகிறது.


இதனை "World WildLife Fund" என்ற அமைப்பு உலகெங்கும் உள்ள ஒவ்வொரு தனி நபரையும், வியாபாரிகளையும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களையும் பூமி மணித்துளியை அனுசரிக்கக் கேட்டுக் கொண்டுள்ளது.


பூமி மணித்துளியின் நோக்கம் - பூமியின் மீது உண்டாகிவரும் தட்ப வெப்ப நிலை மாற்றத்தையும் அதற்கான தீர்வு காணும் உத்வேகத்தையும் உலகளவில் உருவாக்க வேண்டுமென்பதே.


இவ்வருடம், மார்ச் 28 ஆம் தேதி, இரவு 8.30 மணி அமெரிக்க நேரப்படி இந்த பூமி மணித்துளி நேரமாக அனுசரிக்க இருக்கிறார்கள்.



அப்போது ஒரு மணி நேரம் பூமியில் உள்ள அனைவரும் மின்சாரத்தை நிறுத்தி எர்த் ஹவரை அனுசரிக்க வேண்டுமென சொல்கிறார்கள்.


ஆனா இது இந்தியாவுக்கு பொருந்தாது.. நாம தான் தினம் தினம் ஒரு நாலு மணி நேரமாவது இந்த எர்த் ஹவரை அனுசரிச்சிட்டு இருக்கோமே...!!


இன்னும் மின்சார வெளிச்சத்தையே காணாத ஏழை நாடுகளுக்கும் இவை பொருந்தாது.. பொருந்தும் நாள் விரைவில் வர வேண்டுமென்பதே என் பிராத்தனைகள்.


நல்ல விசயமாகபடவே.... நான் தயாராகிவிட்டேன்... அப்போ நீங்க??!!

2 comments:

கலை said...

Go to the link and sign up and become a part of Earth Hour and get useful tips and tools to reduce your carbon footprint everyday.

http://www.earthhour.org/action/

தேவன் மாயம் said...

நல்ல விழிப்புணர்வுடன் எழுதி இருக்கிறீர்கள்!!!