கடந்த சில நாட்களாக ஒரு விளம்பரத்தைத் தொடர்ந்து தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது...
கொஞ்சம் அதிர்ந்து போன நான் இது பற்றி எழுதியே ஆக வேண்டுமென்று தோன்றவே என் இப்பதிவு...
ஒரு ஐந்து வயது குழந்தை தன் தந்தையிடம் வந்து "அப்பா... நான் அழகா இருக்கனா?"
அப்பா, "நீ ரொம்ப அழகா இருக்கம்மா... "
குழந்தை உடனே, "பின்னே ஏன் ஸ்கூல்ல யாருமே என் கிட்ட பேச மாட்டீராங்க..."
உடனே தந்தை ஒரு புது காரில் தன் மகளை ஏற்றி பள்ளிக்கு வருகிறார்.. வழியில் போகும் சிறார் எல்லாம் அக்குழந்தையைப் பார்க்க...
பள்ளியில் இறங்கும் குழந்தை பெருமிதத்துடன் இறங்குகிறது... அருகில் வர பல சிறுவர், சிறுமியர் வட்டமிடத் துவங்குவர்...
ஒரு பெரிய கார் நிறுவனத்தின் இம்மாதிரியான விளம்பரம் கண்டு கொஞ்சம் அதிர்ந்து போனேன்..
எல்.கே.ஜிக்கு செல்லும் குழந்தைகளிடமே இவ்வகை பணக்கார மோகத்தை உருவாக்கி அவர்களின் சமத்துவத்தை பறிக்கும் நிலையாக இதைக் கருதுகிறேன்...
கார் இருந்தால் தான் மதிப்பார்கள்... என்ற பெருமிதம் கலந்த கர்வத்தை தவறாக சிறு வயதிலேயே வளர்க்க அனுமதிக்கும் செயலாகவே இதனை நான் கருதுகிறேன்..
அப்படியெனில் பள்ளிக்கு வரும் மற்ற கார் இல்லாத குழந்தைகளின் மன நிலை???
எங்கே சென்று கொண்டிருக்கிறோம்...
விதைகள் வெம்பும் முன் காத்தல் நம் கடமையல்லவா??
சிந்திப்போமா இனியேனும்...????!!
7 comments:
கண்டிப்பாக யோசிக்க வேண்டிய ஒண்று..
சிந்திப்போமா இனியேனும்//
நாம சிந்திச்சு என்ன செய்ய. புரக்கணிப்புத்தான்.
மூளை வரண்ட நிலையில் இருக்கிறதுஇன்றைய விளம்பரங்கள். அத்தி பூத்தாற்போல்தான் நல்ல விளம்ப்ரங்கள் கண்ணில் தென் படுகிறது.
பதிவிற்கு நன்றி
நன்றிகள் ராஜேஷ்வரி அன்பரே.. :)
ஏற்றதாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க நம் குழந்தைகளிடமிருந்தே ஆரம்பிப்போமே...!!
உண்மை தான் புதுகைத் தென்றல் அவர்களே...
சில நல்ல விளம்பரங்களையும் காண நேர்கிறது.. இடையில் கல் போல இவ்வகையும் இடர்கிறது..
புறக்கணிப்பு மட்டும் போதுமா??
நம் குழந்தைகளுக்கும் புறக்கணிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டுமல்லவா..!!
நன்றிகள் புதுகைத் தென்றல்.. :)
நல்ல பதிவு.. நியாயமான ஆதங்கம்.. இன்றைய விளம்பரங்களின் இழிநிலை பற்றி நான் கூட எழுதி உள்ளேன்.. முடிந்தால் படியுங்கள்..
http://ponniyinselvan-mkp.blogspot.com/2009/03/blog-post_05.html
நன்றிகள் கார்த்திக் பாண்டியன் அவர்களே...
உங்கள் பதிவைப் படித்தேன்.. அருமை.. நியாயமானதும் கூட.. பதிலிட்டுள்ளேன்..
வருகைக்கு நன்றிகள்.
கண்டிப்பாக இது போன்ற விளம்பரங்கள் தவிர்க்கப்பட வேண்டும். உங்கள் ஆதங்கம் நியாயமானதே. . . .
ஏற்றதாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க நம் குழந்தைகளிடமிருந்தே ஆரம்பிப்போமே...!!
இது தான் சரியான வழியும் கூட
Post a Comment