
ஒட்டுமொத்தமும் முழுதும்
தீட்டப்படாமலே அழகாய்
காட்டும் புத்தோவியமாக்கி..!!
முளையா பால்பல்லின்றி
முத்தாய்ப்பாய் சிரிக்கும்
மூன்றுமாத மழலையின்
முகம்காட்டும்
புன்முறுவலை புன்னகையாக்கி..!!
கார்மேகம் சூழ்ந்து
சாரல் பட்டதே
சிரபுன்ஜி மழையாக
சத்தமில்லாமல்
நினைக்க வைத்து
சங்கடப்படுத்தும்
மழையை சீவி
தூரலாக்கி..!!
எழுத எத்தனிக்கும்
என் எண்ணவோட்டத்தின்
வேகத்தில்
எழுதமுடியாத என்
எழுதுகோல் எப்போதும்
பாதி எண்ணங்களையே
முனகலுடன்
பிரசவிக்கும்
குறை பிரசவங்களாக்கி....!!
-பூமகள்.
1 comments:
அழகான கவிதை
Post a Comment