RSS

Wednesday, February 6, 2008

முள்ளாகும் முல்லைகள்..!

முள்ளாகும் முல்லைகள்..!



காலை அவசரத்தில்
நூடில்ஸ் சிற்றுண்டி..!
வாயில் பாதி..
தட்டில் மீதி..!

ஃப்ரி.கே.ஜி ரைம்
தேர்வு.. - மனனம்
மனத்தில்..!

மாலை வந்ததும்
பூட்டிய வீடு..!

சோர்ந்து சாவி வாங்கி
தொலைக்காட்சி காட்டில்
கார்டூன் நண்பர்கள்..!

துப்பாக்கி தூக்கி
சுட்டு வீழ்த்தும்
தீரர்கள்..!

நீரின்றி மழலை
இமைக்காமல் குடிக்கும்
வன்முறை பானம்..!

குடித்து தீர்ந்ததும்
குற்றுயிராய் கிடக்கும்
மனிதம் கீழே..!

அன்னையின் அன்பு
முத்தத்தோடு வாழும்..!
பேச நேரமின்றி இரவுணவு
சமைத்தலில் மாயும்..!

மறுநாள் பள்ளியில்..
சின்ன சலசலப்பு..!
வன்முறையில் முடியும்..!

முல்லைகள் முள்ளாவது
என்று புரியும் நமக்கு??




(வெளிநாட்டில் எல்.கே.ஜி குழந்தை துப்பாக்கியோடு பள்ளிக்குச் சென்று மற்றவரைச் சுட்டுக் கொன்றதாக செய்தி அறிந்தேன். அதன் தாக்கத்தில் எழுதியது.)




__________________
~பூமகள்.

2 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போகும் வீடுகளில் குழந்தைகள் பாடு பாவம் தான்...

பூமகள் said...

ஆஹா..!
மிக்க நன்றிகள் அன்பர் ரவிசங்கர்.

உங்களின் வருகை எனக்கு பேரும் ஆனந்தம் தருகிறது.

தொடர்ந்து வாங்க. விமர்சியுங்கள்.

நன்றிகள் கோடி.