வழிவிடுங்கள்..
வேகாத வெயிலில்
வெந்து போன காலுடன்
பாரமிழுத்தபடி சாலை கடக்க
பெரியவர் வர கூடும்..
கூடை நிறைய
வத்தல் பொட்டலங்கள் கொண்டு
வதங்கிய முகத்துடன்
வயதான மூதாட்டி
நீரருந்த வரக் கூடும்..
வழி விடுங்கள்..
அபலை மனிதத்தை
குற்றுயிராக்கி
காசு பார்க்கும்
கயவர் கண் படாத படி
அவர்கள் செல்ல
வழி விடுங்கள்...
-----------
-பூமகள்.
4 comments:
வழி விடுங்கள் is fine.
The Mother Novel is written by MAXIM GORKY. not by karl marx....
please dont give wrong information...
With regards,
jeeva.
நல்லா இருக்கு
அனுஜன்யா
வணக்கம் ஜீவா.
உங்களின் சுட்டுதலுக்கு நன்றி.. வெகு நாட்கள் முன்பு நான் தவறாக பெயரை எழுதிவிட்டேன். மார்சிம் கார்க்கி புத்தகமென்று எனக்கும் தெரியும்..
உங்கள் வருகைக்கும் விமர்சனத்துக்கும் நன்றி.
அன்புடன்,
பூமகள்.
நன்றி அனுஜன்யா. :)
Post a Comment