RSS

Thursday, March 12, 2009

இது நியாயமா??!!


இது நியாயமா?


என் எல்லா சொற்களையும்

உன் கன்னக்குழியில்

புதைத்துவிட்டு

மீண்டும் மீண்டும்

சொல்லச் சொல்கிறாயே..


இது நியாயமா??!!


இதயச் சிறையில்

இன்பமாய் அமர்ந்து

நிதம் எனை

சிறையிலடைக்கிறாயே..


இது நியாயமா??!!


நான் பார்க்கையில்

நீ பாராமல்

நான் பாராமல்

எனைப் பார்க்கிறாயே..


இது நியாயமா??!!


இப்பிறவி முக்தியாகுமென

நீ சிலாகிக்க..

ஏழு பிறவியும் போதாதென

எண்ண வைக்கிறாயே...


இது நியாயமா??!!



6 comments:

Suresh said...

arumai nanba :-) nalla pathivu, voteum potachu, nanum oru pathivu potu ullan padithu pidithal podunga vote, esp kalingar pathivu

Anonymous said...

நியாயமில்லைதான்!

படம் அருமை பூமகள்! ப்ளாகில் பாடல் ஓடுவதால் பிரவுசர் hang ஆகிறது..

வாழ்த்துக்கள்!

பூமகள் said...

நன்றிகள் சுரேஷ்.

கண்டிப்பாக பார்க்கிறேன்.. :)

பூமகள் said...

நன்றிகள் ஷீ.

இப்போது பிரவுசர் ஹேங் ஆகாதென்று நம்புகிறேன்..

புதியவன் said...

//இதயச் சிறையில்
இன்பமாய் அமர்ந்து
நிதம் எனை
சிறையிலடைக்கிறாயே..//

அழகான கவிதை வரிகள்...

பூமகள் said...

ரொம்ப நன்றிகள் புதியவன் அவர்களே...

தொடர்ந்து விமர்சியுங்கள். :)