நேரங்கள் மட்டுமே
நிரம்பி வழியும்
கோப்பைகளுக்குள்
தத்தளிக்கிறது மனம்..
நிற்கவோ,
நடக்கவோ
நேரமில்லை...
ஓடியபடியே
குடித்துப் போகிறேன்
ஒவ்வொருமுறையும்
நிமிட பானங்களை..
அவதியில் குடித்ததால்
அஜீரணமாகின்றன..
சில கசப்பான பொழுதுகள்..
இருந்தும்
எல்லாரும் போலவே
நிற்காமல் ஓடி
நேர பானத்தைக்
குடித்து வைக்கிறேன்
நானும்...!!
---------------------------
பூமகள்.
1 comments:
இருந்தும் அவைகள் தீர்ந்துபோவதில்லை...
யாரும் சிந்தித்திராத பார்வை!
வாழ்த்துக்கள் பூமகள்!
Post a Comment